கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களுக்கு பலதரப்பட்ட மனிதநேயப்பணிகளைத் தொடர்ச்சியாக செய்துவருகின்றது.
அந்த வகையில் சம்மாந்துறை திறஸ்ஸதுல் இஸ்லாமிய்யா அரபிக் கல்லூரிக்கு குடிநீர் , வுழு செய்வதற்கான நீர்த்தொகுதி அமைப்பு மற்றும் பொதுக்கிணறு அமைத்துத் தருமாறு கல்லூரி நிர்வாகத்தினர்கள் அல்ஹாபிழ் ஏ.ஆர்.எம். இர்பான் (தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை உத்தியோகத்தர்) ஊடாக ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பிடம் அண்மையில் கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தனர்.
அக்கோரிக்கையினை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகர பிரதிமுதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர் ஏற்றுக்கொண்டு மிகவும் குறுகிய நாட்களுக்குள் குறித்த நீர்தொகுதி அமைப்பு மற்றும் பொதுக்கிணற்றையும் அமைத்து உத்தியோகபூர்வமாக திறந்து கல்லூரி நிர்வாகிகளிடம் கையளித்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வுக்கு பவுண்டேஷன் தலைவர் ரஹ்மத் மன்சூர் , கல்லூரியின் தலைவர் கே.எம்.ஐ. றம்ஸின் மெளலவி, அதிபர் ஆர். அஸ்மதுல்லாஹ், செயலாளர் அல்-ஹாஜ் எம்.எச். ஜெளபர், மற்றும் மாலைதீவில் இருந்து விஷேட அதிதிகளாக வருகை தந்த பொறியியலாளர் இப்றாஹிம் ஹஸ்ஸன், ஆசிரியர் எம்.ஆர்.எம். நெளபல் மற்றும் குடும்பத்தினர்களுடன் பவுண்டேஷனின் உறுப்பினர்களும், கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி மாணவ மாணவிகள், புத்திஜீவிகள், நலன்விரும்பிகள் என மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் கல்லூரியில் இருக்ககூடிய குறைநிறைகளை அறிந்துகொண்டதோடு எதிர்காலங்களில் தன்னால் இயலுமான உதவிகளைச் செய்யவிருப்பதாகவும் இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த Y.W.M.A பேரவைக்கும் தனது விஷேட நன்றிகளையும் இதன்போது ரஹ்மத் மன்சூர் தெரிவுத்துக்கொண்டார்.
0 comments :
Post a Comment