“பதியமிட்டோருக்கான கௌரவமும் விளைந்த பயிர்களின் மீளிணைவும்” எனும் மகுடத்தில் 1991 ஆம் ஆண்டு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் -தரம் 6 G வகுப்பு நண்பர்களின் ஒன்றுகூடல் கல்முனை சாஹிரா தேசியக் கல்லூரி இராசவாசல் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
அக்கால பகுதியில் அதிபர்களாக ஆசிரியர்களாக இருந்து மாணவர்களுக்கு கல்வித் தாகத்தை தீர்த்தது மட்டுமல்ல சமூகத்திகேற்ற நல்ல பிரஜைகளை உருவாக்குவதில் தங்களை தியாகம் செய்த செம்மல் களை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் உள்ளத்தில் வைத்திருந்து பாராட்டி கெளரவிக்கும் மாணவர் சமூகமும் நம் மத்தியில் உள்ளது என்பதற்கு இந்த நிகழ்வு சான்றாக அமைகிறது. வகுப்பு நண்பர்கள் பல்வேறுபட்ட துறைகளில் இன்று பிரகாசிப்பதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
மருத்துவர்களாகவும், பொறியியலாளர்களாகவும், கல்வியாளர்களாகவும் , பட்டதாரிகளாகவும் , சட்டத்தரணிகளாகவும் , வர்த்தக பிரமுகர்களாகவும் , சமூகத்திற்கேற் நற்பிரஜைகளாகவும் , விளையாட்டுத்துறை முக்கியஸ்தர்களாகவும் , அலுவலக உத்தியோகஸ்தர்களாகவும் , விரிவுரையாளர்களாகவும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இன்று பிரகாசிப்பதற்கும் ஆசிரியர்களின் பங்களிப்பும் தியாகமும் இன்றும் மறக்கமுடியாத நினைவாகவே காணப்படுகிறது.
எந்தவொரு தொழில்துறையை சார்ந்தவர்களை விட சென்ற இடமெல்லாம் ஆசிரியர்களுக்கு கிடைக்கும் மரியாதையும் மதிப்பும் எண்ணிலடங்காது.
0 comments :
Post a Comment