நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை மாற்றத்தால் காரைதீவு மாளிகைக்காடு கடற் பிரதேசங்கள் பாரிய கடல் அரிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இன்று (8) வியாழக்கிழமை பூராக வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டதுடன் மழையும் பெய்து கொண்டிருந்தது. கடும் குளிர் நிலவியது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.
பாடசாலை தொடக்கம் அலுவலகங்கள் வரை வரவு குறைந்திருந்தது.
எதிர்வரும் பத்தாம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது .மேலும் கரையோரப் பிரதேசமக்கள் 24 மணி நேரமும் விழிப்பாக இருக்குமாறும் கடற்கரையில் இருக்கக்கூடிய தோணிகள் வள்ளங்கள் இயந்திர படகுகளை சற்று தள்ளி கரையிலே மிகவும் கவனமாக வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள் .
கரையோரப் பாதுகாப்புத் திணைக் களத்தினா ஊடாக சில வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அம்பாறை உகன இறக்காமம் போன்ற பகுதிகளிலே பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்தன. அவை உடனடியாக அகற்றப்பட்டிருக்கின்றன.
ஏனைய பகுதிகளில் மழை பொழிந்து கொண்டிருக்கின்றது.
இடையிடையே காற்று பலமாக வீசியது .பல மரங்கள் முறிந்து விழுந்ததையும் காண முடிந்தது .
இதேவேளை மாளிகைக்காட்டு கடற்கரை பிரதேசத்தில் கடல் மிகவும் சீற்றமாக காணப்பட்டதுடன் கடல் அரிப்பும் வேகமாக இடம்பெற்று வருகின்றது. மீன்வாடிப் பிரதேசம் மற்றும் மையவாடிப் பிரதேசத்தில் கூடிய கடலரிப்பு இடம் பெற்றது.
அங்குள்ள முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.எச்.எம்.நாசர் கடலரிப்பு தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment