ஓட்டமாவடியை சேர்ந்த மொகம்மட் காசிம் ஷரீப் ஹூஸைன் மத்தியஸ்த சபையில் பத்து வருடங்களுக்கு மேல் கடமையாற்றிமைக்காக தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரீ.கருணாகரன் முன்னிலையில் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் வாகரை பிரதேச சபையின் நூலகராவும் கடமையாற்றி வரும் ஷரீப் ஹூஸைன் ஓட்டமாவடி ஆயிஸா பள்ளிவாயலின் செயலாளராகவும், ஓட்டமாவடி முஸ்லீம் சனசமுக நிலையத்தின் செயலாளராகவும், ஓட்டமாவடி தேசிய பாடசாலை 1990 அமைப்பின் பொருளாலராகவும், ஓட்டமாவடி வளர் பிறை விளையாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளை வகித்த இவர் 2022ம் ஆண்டின் நிருவாக சபை உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.
இவர் ஓட்டமாவடியை சேர்ந்த மர்ஹூம்களான யூ.எல்.மொகம்மட் காசிம் கே.எல்.அவ்வா உம்மா தம்பதிகளின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment