அரசாங்கத்தினால் நிறைகுறைந்த குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் பிரதேச செயலகம் தோரும் பல்வேறு வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களான காவத்தமுனை மற்றும் மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவுகளில் 03வயதிற்கு குறைந்த குழந்தைகளில் நிறை குறைந்த குழந்தைகளுக்கு பொன்டேரா (குழவெநசசய) நிறுவனத்தின் அனுசரனையில் பால்மா பொதிகள் வழங்கும் நிகழ்வு காவத்தமுனை மற்றும் மாஞ்சோலை கிராமங்களில் இடம் பெற்றது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சிபார்சில் தெரிவு செய்யபட்ட குழந்தைகளுக்கு இராணுவத்தின் ஒத்துழைப்புடன் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட 59 குழந்தைகளுக்கு தலா ஒரு குழந்தைக்கு 400 கிராம் பால்மா பக்கட்டுகள் இரண்டு வீதம் வழங்கி வைக்கப்பட்டன.
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இராணுவத்தின் 04வது கெமுனுஹேவா படையணியின் அதிகாரி லெப்டினன் அரவிந்த அபேரத்ன, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவல அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு பால்மா பொதிகளை வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment