காரைதீவில் களை கட்டிய விழிப்பூட்டல் கண்காட்சி




நூருள் ஹுதா உமர்-
மது பாரம்பரியமும் ஆரோக்கியமும் என்ற மகுடத்திலான விழிப்பூட்டல் கண்காட்சி காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு ஆயுர்வேத மத்திய மருந்தகம் ஆகியன இணைந்து நடத்திய இக்கண்காட்சியில் பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம். சி. எம். காலித் ஆகியோர் க்ண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகதீசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். காரைதீவு பிரதேசத்தில் இருந்து மாத்திரம் அல்லாமல் அண்டிய பிரதேசங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இதில் பங்கேற்று பயன் அடைந்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :