சிறுவர்களின் கைவண்ணத்தில் கல்முனையில் கண்காட்சி.!


எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை ஹுஸைனியா பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் சிறுவர்களின் கைவண்ணத்தில் கழிவுப் பொருட்களைக் கொண்டு அழகிய கைவினை பொருட்களை உருவாக்கி காட்சிப்படுத்தும் கண்காட்சி நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.எல்.நஸ்ரின் தலைமையில் புதன்கிழமை (30)இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்முனை கல்வி வலய முன்பள்ளி பாலர் பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம். ஏ.எம்.ரசீம் கல்முனை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எம்.புவிராஜ் மேலும் சிறப்பு அதிதிகளாக கல்முனை சமுர்த்தி வங்கி வலயத்தின் உதவி முகாமையாளர் ஐ.எல்.அர்சுதீன் கல்முனை 5,6ஆம் பிரிவுக்கான பொதுச் சுகாதார மருத்துவ மாது டி.கயல்விழி மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்

இதன் போது மாணவர்களின் திறமையை வெளிக்காட்டு முகமாக கழிவு பொருட்களின் மூலம் பல கைவினைப் பொருட்கள் மற்றும் மாணவர்களினால் நடப்பட்ட வீட்டுத் தோட்டம் என்பன காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :