நேற்றைய தினம் (23.12.2022) ஹொரணை, நியுசெட்டல் தமிழ் வித்தியாலயத்தினால் சிங்க மலை என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க சிகிரியாவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற வேளை தனது தோழியை தோளிலேயே சுமந்து சென்றுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலையத்தில் வைரலாகி வருகின்றது.
பிறவியிலேயே விஷேட தேவையுடைய அஷ்விகா என்ற மாணவி நியுசெட்டல் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 11 ல் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார்.
அவிஷ்காவின் நண்பிகளான ஸ்டெல்லா மற்றும் கௌசல்யா ஆகியோர் தனது நண்பியும் சிகிரியாவின் அழகை இரசிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் 1,144 அடி உயரமுடைய சீகிரியாவின் உச்சத்திற்கு தங்களது தோள்களிலேயே சுமந்து சென்றுள்ளனர்.
இந்நிகழ்வினை நேரில் கண்ட ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவ்விரு மாணவிகளை வெகுவாக பாராட்டியுமுள்ளனர்.
0 comments :
Post a Comment