தெற்காசிய கராத்தே போட்டியில் மட்டக்களப்பு மாணவன் துஷ்யந்தன் வெள்ளிப் பதக்கம் வென்றார்



அஸ்ஹர் இப்றாஹிம்-
தெற்காசிய கராத்தே சம்மேளனத்தினால் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடாத்தப்பட்ட தெற்காசிய கராத்தே போட்டியில் இலங்கைக்கு 16 தங்கப் பதக்கங்களும் , 20 வெள்ளிப் பதக்கங்களும் , 27 வெண்கலப் பதக்கங்களுமாக மொத்தம் 63 பதக்கங்கள் கிடைக்கப்பெற்றன..

இதில் கிழக்கு மாகாணத்திலிருந்து மட்டக்களப்பை சேர்ந்த துஷ்யந்தன் என்னும் மாணவன் 21 வயதுக்குக்கீழ் 55 கிலோகிராம் இடைப்பிரிவில் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கத்தினை பெற்றுக் கொண்டார்.

இவர், 2015 இல் முதன்முதலாக பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய கராத்தே போட்டியில் வெள்ளிப்பதக்கத்தினை பெற்றதன் மூலம் தனது முதலாவது தேசிய பதக்கத்தினை பெற்றதோடு, அதன் பின்பும் தேசிய பதக்கத்தினைப் பெற்று இறுதியாக சர்வதேச பதக்கத்தை பெற்றுள்ளார்.

இவருக்கு கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :