தமிழக சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாகிருல்லா எழுதிய "நபிகளாரின் சமூக உறவு" நூல் வெளியீட்டு நிகழ்வு


ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் தமிழக சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச்.ஜவாகிருல்லா எழுதிய "நபிகளாரின் சமூக உறவு" நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு 10இ பிரதம தபாலக கேட்போர்கூடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டாளர் என்.எம்.அமீன் மற்றும் போரத்தின் தலைவி புர்கான்பீ இஸ்திகார் ஆகியோரின் இணைத் தலைமையில் வெள்ளிக்கிழமை(09) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் வெளி விவகார அமைச்சர் அலிசப்ரி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் முன்னாள் இந்தியன் லோக் சபா உறுப்பினருமான பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விசேட உரையாற்றினார் சிரேஸ்ட ஊடகவியலாரும் காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியருமான என். வித்தியாதரன் நூல் ஆய்வினை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன்இ முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசிஇ முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார்இ தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலிஇ கொழும்பு மாநகர சபை பிரதி மேயர் எம்.ரி.எம்.இக்பால் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

நபிகளாரின் சமூக உறவு நூலின் முதற் பிரதியை பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த அமைச்சர் அலி சப்ரியிடமிருந்து முஷான் இன்டநெஷனல் பிரதம நிறைவேற்று அதிகாரி முஸ்லிம் ஸலாஹுதீன் பெற்றுக்கொண்டார்.

நூலின் பிரதிகள் ஏனைய அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் வருகைதந்தவர்களும் பெற்றுக்கொண்டனர். இதன்போது அதிதிகள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
ஸ்ரீலங்கா மீடியாபோரத்தின் மீடியா டயரியும் இங்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஏற்புரையை நூலாசிரியரான பேராசிரியர் எம்.எச்.ஜவாகிருல்லா நிகழ்த்தினார்.
நன்றியுரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம்.நிலாம் நிகழ்த்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :