இலங்கை அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டின் செயற்திட்டங்களில் ஒன்றான நாவலர் வீதி பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைத்தல் நிகழ்வு நேற்று திருக்கோவிலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இந்தியா தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த உலகப் புகழ்பெற்ற ஓவியர் மு . பத்மவாசன் இவ் வீதி பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து திறந்து வைத்தார்.
திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன், உபதவிசாளர் பி.விக்னேஸ்வரன்,
திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன், உதவிக் கல்வி பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா, ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வண்ணக்கர் வ.ஜெயந்தன், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கே.ஜெயராஜ், திருக்கோவில் பிரதேச செயலக முன்னாள் கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர் கண. இராஜரெத்தினம் , திருஞானவாணி அறநெறி பாடசாலை தலைவர் ஆ.கணேசமூர்த்தி ,எழுத்தாளர் சு.கார்த்திகேசு, திருக்கோவில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் அறநெறி ஆசிரியர்கள் மாணவர்கள் ஊடகவியலார்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் நாவலர் ஆண்டின் மூன்றாவது வீதி திருக்கோவிலில் திறந்து வைக்கப்பட்டதமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment