கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவின் 'பறக்கத் தெரியாத பறவைகள்'சிறுவர் கதையாக்கத்திற்கு தேசிய விருது.




கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்-
வியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவின் 'பறக்கத் தெரியாத பறவைகள்' சிறுவர் கதையாக்கத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

 புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த பிரதேச செயலக மட்டம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்திலும் நடாத்தப்பட்ட இலக்கியப் போட்டித் தொடரில் வெற்றியாளர்களுக்கிடையே தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்காக 2022ஆம் ஆண்டிற்கான தேசிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு கடந்த 2022-11-17ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் தினேஷ;; குணவர்த்தன தலைமையில் நடைபெற்றது.

இதன் போது சிறுவர் கதையாக்கப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற கவியரசி செய்யது அஹமது இஸ்மத் பாத்திமாவின் 'பறக்கத் தெரியாத பறவைகள்' சிறுவர் கதையாக்கத்திற்கு தேசிய விருதாக தங்கப்பதக்கத்தையும்,ரூபா பத்தாயிரம் காசோலையையும்,சான்றிதழையும் அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர வழங்கி கௌரவித்தார்.இதன் போது பாராளுமன்ற உறுப்பினரும்,புத்தசாசன,மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சருமான விதுர விக்கிரமநாயக்க மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் தரணி அனோஜா கமகே ஆகியோரும் அருகில் நின்றனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :