கிழக்கை தனித்து கையாள ஜனாதிபதி முதல் சகலரும் முயற்சிக்கின்றனர்! அதற்கு இடமளிக்கமுடியாது என்கிறார் சுமந்திரன்.



வி.ரி. சகாதேவராஜா-
மிழர்கள் கிழக்கில் தனித்து பெருபான்மை நிலை நாட்ட முடியாது என்பதால்தான் ஜனாதிபதி உட்பட பல அரசியல்வாதிகள் கிழக்கினை தனித்து ஒதுக்கி நடக்க முயற்சிக்கின்றனர் அதற்கு இடமளிக்க முடியாது.

இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (17) சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு முதலில் திருக்கோவிலுக்கு விஜயம் செய்தபோது இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தில் பேசும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக் கூட்டம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையில் திருக்கோவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

அம்பாறையும் திருகோணமலையும் ஆபத்தான நிலையில் உள்ளது .வடகிழக்கில் மிகமுக்கியமாக எங்களது கரிசனை கிழக்கினை நோக்கி இருக்க வேண்டும். அரசியலைப்பு மாற்றங்கள் செய்ய கட்சிக்குள் உள்வாங்கப்பட்ட நான் அம்பாறையை கவனிக்க நிர்பந்திக்கப்பட்டேன்.
யுத்தம் முடிவுற்று நடந்த 2010தேர்தலில் தேசியப்பட்டியல் ஊடாக முதன் முதலில் பாராளுமன்றம் வந்த நான் அரசியலைப்பு திருத்தம் தீர்வு திட்டம் சட்டம் தொடர்பில் கையாளும்படி என்னை கூறிய அரசியலுக்குள் உள் வாங்கினர் .ஆனாலும் அக்காலத்தில் அம்பாறையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பியசேன கட்சி மாறியமை தொடர்ந்து அம்பாறையையும் பார்க்கும்படி கட்சிப் பணியை ஆரம்பித்தேன்.ஆகவே அன்றிலிருந்து இன்றுவரை எனது பயணம் அம்பாறைக்கான பணியாக இருக்கிறது.என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பேசுகையில் :-ஜனாதிபதி வடக்கு கிழக்கு பிரச்சினை என இரண்டாக பிரித்து தீர்வு திட்டம் ஒன்றை முன்மொழிவது அவரின் பிரித்தாளும் தந்திரமாக உள்ளது அதேபோல் உள்ளூராட்சி சபை பிரிப்புக்களும் இந்தவகையில் அமைய கூடாது எல்லை நிர்ணயம் சரியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
கூட்டத்தில் திருக்கோவில் தொகுதி கட்சி அமைப்பாளர் அ.கலாநேசன் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர் அருள்.நிதான்சன் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :