இது பற்றி அவர் தெரிவித்ததாவது,
தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினை 2012ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்தது. அப்பள்ளிவாயல் புனித பூமிக்குள் இருப்பதால் அதற்கு வேறு காணி தருகிறோம் அங்கு மாற்றுங்கள் என பௌத்த தேரர்களால் சொல்லப்பட்டது. பள்ளியை மாற்ற இடமளிக்க முடியாது என பள்ளி நிர்வாகம் உறுதிபட தெரிவித்தது.
அப்போது ரவூப் ஹக்கீம், அதாவுள்ளா, ரிசாத் பதியுதீன் ஆகியோர் மஹிந்தவின் அமைச்சரவையில் இருந்தனர். இவர்களில் முஸ்லிம் காங்கிரசும், மக்கள் காங்கிரசும் இப்பிரச்சினையை பயன் படுத்தி மஹிந்தவுக்கெதிரான பிரச்சினைகளை முன்னெடுத்தனர்.
அந்த நேரத்தில் உலமா கட்சி மஹிந்த ஆதரவு கட்சியாகவும் அதன் தலைவர் மக்கள் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினராகவும் இருந்தார்.
தம்புள்ள பள்ளியை இடம் மாற்ற அனுமதிக்க முடியாது என்றும் அப்பள்ளியை உடைக்க முயன்றவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் உலமா கட்சி கூறியது.
இதை ஜனாதிபதி மஹிந்த தரப்பு ஏற்காததால் மஹிந்த ஆதரவிலிருந்து உலமா கட்சி பகிரங்கமாக வெளியேறியது.
அதே போல் இப்பிரச்சினையை மஹிந்தவுடன் அமைச்சரவையில் இருந்து கொண்டே மஹிந்தவுக்கு எதிராக குழி பறிப்பது அர்த்தமற்ற செயல் என்றும் அப்படியான கட்சியான மக்கள் காங்கிரசில் இருந்து விலகிக்கொள்வதாக முபாறக் அப்துல் மஜீத் அறிவித்தார்.
இது விடயத்தில் தம்புள்ள பள்ளி நிர்வாகத்துக்கும் தேரர்களுக்குமிடையில் சமாதானத்தை உருவாக்க அப்போது எம்பியாக இருந்த ஹிஸ்புள்ளா முயன்றார்.
இதற்காக ஹிஸ்புல்லாவையும் முஸ்லிம் சமூகம் ஏச்சோ ஏச்சு என தூற்றியது.
அதே நேரம் 2012ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் என்பன தனித்து போட்டியிட்டதுடன் மஹிந்தவின் அமைச்சர்களாக இருந்து கொண்டே மஹிந்த ஆட்சி பள்ளிகளை உடைக்கிறது என கிழக்கில் பிரச்சாரம் செய்தனர்.
அதாவுள்ளா அமைச்சராக இருந்தாலும் மஹிந்த ஆட்சியை ஏசாமல் மஹிந்த தலைமையிலான கட்சியுடன் இணைந்து தன் கட்சியை இறக்கினார்.
தம்புள்ள விடயத்தில் மஹிந்தவுடன் முரண்பட்ட உலமா கட்சி கிழக்கு தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்தது.
மஹிந்தவுடன் இருந்து கொண்டே மஹிந்த ஆட்சியை எதிர்ப்பது போல் காட்டுவது கிழக்கு மக்களை ஏமாற்றுவதாகும் என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் மு. காவும், ம. காவும் மஹிந்தவுக்கெதிராக பேசி கிழக்கு முஸ்லிம்களை ஏமாற்றி அவர்கள் வாக்குகள் பெற்ற பின் மீண்டும் மஹிந்த கட்சியுடன் இணைந்து கிழக்கில் ஆட்சி அமைத்தனர்.
அன்று மஹிந்த ராஜபக்ஷ முன் வைத்த அதே தீர்வை தற்போது ஜனாதிபதி ரணில் ஆட்சியில் தம்புள்ள பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டு பள்ளிவாயலை இடம் மாற்றி புதிய பள்ளி கட்டி பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இப்பிரச்சினை முடிவுக்கு வந்ததையிட்டு ஐக்கிய காங்கிரஸ் கட்சி தனது வாழ்த்துக்களை ஜனாதிபதிக்கு தெரிவித்துக்கொள்கிறது.
0 comments :
Post a Comment