வடக்கின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளது போல் அம்பாரை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகளை விடுவிக்க பாராளுமன்றத்தில் தூங்கும் முஸ்லிம் கட்சிகள் முயற்சிக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
வடமாகாண காணிகளை விடுவிக்க முயற்சிக்கும் ஜனாதிபதியின் இத்தகைய நடவடிக்கைகள் நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு செல்லலாம் என தெரிகிறது.
அதே வேளை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் கரும்புச்செய்கை என்ற பெயரில் பலாத்காரமாக அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களை காணிகளை மீட்டெடுக்க பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகள் எந்த உருப்படியான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
அதே போல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அபகரிக்கப்பட்ட காணிகளும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.
இனியாவது இது பற்றி ஜனாதிபதியுடன் பேசுவதற்கு இக்கட்சிகளுக்கு ஓட்டுப்போட்ட மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment