இன்று (17/12)காலை 09.00 மணியளவில் புன்னக்குடா பனைமரக் காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்ற சகோதரர் ஒருவர் துர்நாற்றம் வீசுவதை அவதானித்து, அத்திசை நோக்கி சென்று அவதானித்த போது நாவ மரக் கிளையில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று தொங்குவதை அவதானித்து
உடன் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாட்டினை பதிவு செய்தார்.
உடன் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் தடயங்களை அவதானித்துவிட்டு தடயவியல் பொலிசாருக்கும், திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் விடயத்தை தெரிவித்து குறித்த பிரதேச கிராம சேவை உத்தியோகத்தருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்
கடந்த 25/11 அன்று தனது விறகு எடுக்க சென்ற சகோதரனை காணவில்லையென 28/11 அன்று பொலிஸில் ஏறாவூர். தாமரைக்கேணியை சேர்ந்த சவுரியதும்மா என்ஈற பெண்மணி முறைப்பாடு செய்திருந்ததால் அவரை தேடி விடயத்தை தெரிவித்து அழைத்து வந்து சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர்.
அவர் அணிந்திருந்த சப்பாத்து, சாரன் என்பவற்றை கண்டே அடையாளம் கண்டுள்ளார். தம்பிலெப்பை ரம்ளான் (54) என்பராவார்
சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிசாருடனும் ஏறாவூர் பொலிசாருடனும் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி MSM நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்
மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
0 comments :
Post a Comment