கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா


பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் 6 ஆவது பட்டமளிப்பு விழா அரபுக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
குறித்த அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில் சனிக்கிழமை(3) அரபுக்கல்லூரி வளாகத்தில் கல்லூரி அதிபர் ஏ.சி தஸ்தீக் மதனி தலைமையில் வரவேற்புரையுடன் சிறப்பாக இடம்பெற்றது.

இவ்விழாவில் பேராதனை பல்கலைக்கழக அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பிரிவு பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம் சலீம் பிரதம அதிதியாகவும் கௌரவ விருந்தினராக கல்லூரியின் ஆளுநர் சபைத் தலைவர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் மலர் அறிமுக உரையினை அரபுக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் ஏ.எல் நாஸிர் கனி மேற்கொண்டார்.
மேலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றதுடன் விழாக்குழுத் தலைவரும் முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான அப்துல் கபூரின் நன்றி உரையுடன் குறித்த நிகழ்வு நிறைவடைந்தது.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமாபாத் பகுதியில் அமைந்துள்ள அல்-ஹாமியா அரபுக் கல்லூரி கலாபீடம் ஸ்தாபிக்கப்படும்போது இந்நாட்டில் சுமார் 75 அரபுக் கல்லூரிகளே காணப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை ஷர்கிய்யா அரபுக் கல்லூரி சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி என்பனவற்றுக்கு அடுத்தபடியாக 1979.12.07 ஆம் திகதி உருவாக்கப்பட்ட மிகப்பிரசித்தி பெற்ற மூன்றாவது அரபுக் கல்லூரியாக கல்முனை அல்- ஹாமியா அரபுக் கல்லூரி விளங்குகின்றது.

அல்-ஹாமியா அரபுக் கல்லூரி ஹிமாயதுல் இஸ்லாம் இயக்கத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இது 1979 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட உன்னத நோக்கம் கொண்ட ஓர் அமைப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :