மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கும் மாளிகைக்காடு : தற்காலிய தீர்வுகள் பயனற்று போகின !



நூருல் ஹுதா உமர்-
டல்கொந்தளிப்பினால் மீண்டும் பிரச்சினையை சந்திக்க தயாராகி வருகின்றது மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி. கடந்த வருடம் ஏற்பட்ட கடல்கொந்தளிப்பினால் சுற்றுமதில் முழுமையாக இடிந்து விழந்து ஜனாஸாக்கள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியின் பயனாக பிரதமரின் தலையீட்டினால் ஒரு கோடி நாற்பது லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தடுப்புசுவரும் இந்த வருட கடல் கொந்தளிப்பினால் பயனற்று போகி கடலரிப்புக்கு இலக்காகி சேதமாகியுள்ளது.

கடல்கொந்தளிப்பிலிருந்து மாளிகைக்காடு ஜனாஸா மையவாடியை பாதுகாக்க நிர்மாணிக்கப்பட்ட அணைக்கட்டுக்கு பக்கத்தில் 10- 12 அடி ஆழமான பாரிய குழிகள் விழுந்துள்ளதுடன் கடலரிப்பினால் கடலை நோக்கி மண்ணிழுபட்டு சென்றுள்ளதனால் அணைக்கட்டும் பலமிழந்து மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி ஆபத்தை சந்திக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை மீண்டும் எழுந்துள்ளது. மையவாடிக்கு அண்மையில் உள்ள விநாயகர் ஆலயம், பாதுகாப்புப்படை காரியாலயம் போன்றன கடலரிப்புக்கு இலக்காகி உள்ளது. இது விடயம் தொடர்பில் அரச அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மீனவர்களின் மீன்பிடி படகுகளும், வள்ளங்களும் நிறுத்த இடமின்றி வீதிக்கு அருகில் இழுத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதுடன் கொங்கிரீட் வீதிகளும் கடலரிப்பில் உடைந்து கடலுடன் சங்கமித்துள்ளது. அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்கள் முற்றாக கடலரிப்புக்கு இலக்காகியுள்ளது இங்கு கவனிக்கப்படவேண்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :