இணைந்த கரங்கள் அமைப்பினால் முல்லைத்தீவு இருட்டுமடு தமிழ் வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் 76 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் குணசிங்கம் உதயகுமார் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் புதுக்குடியிப்பு கோட்டக்கல்வி அதிகாரி சின்னையா பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மேலும் முல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் சிவபாலன் சுதாகரன், முன்னாள் அதிபர் துரைசிங்கம் யோகராசா . ஆசிரியர் குலசூரியன் சூர்யப்பிரகாஸ், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள்,இணைந்த கரங்கள் உறுப்பினர்களான பெ.விவேகானந்தன்,லோ.கஜரூபன், எஸ்.காந்தன், நா.சனாதனன், ப.சஜிந்தன், கோ.சிவானந்தம், மு.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இணைந்த கரங்கள் இப்பணியினை இடை விடாது அவர்களது கல்வியில் அக்கறை காட்டி மாணவர்களை பாடசாலையை விட்டு விலகாமல் அவர்களை பாடசாலைக்கு தினமும் சென்று கல்வியை கற்க வேண்டும் நோக்கத்துடன் "ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" எனும் கூற்றிற்கு இணங்க மாணவர்களின் எண்ணங்களில் இதனை விதைத்துள்ளது.
இணைந்த கரங்கள் அமைப்பினரால் மு/இருட்டுமடு தமிழ் வித்தியாலய பாடசாலையில் தரம் 01 தொடக்கம் தரம் 09 வரை கல்விகற்கும் 76 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இணைந்த கரங்கள் உறவுகளினால் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை, பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment