நிந்தவூர் 20ம் பிரிவைச் சேர்ந்த வரதராஜன் றினோஜி எனும் தமிழ் மாணவி கொழும்பு பல்கலைக்கழகசட்ட பீட பட்டதாரியாக (2ம் வகுப்பு உயர்மட்டம்) முதலாவது மாணவியாக வெளியாகியுள்ளார்.
இலங்கை சட்டகல்லூரியில் இறுதி ஆண்டு பரீட்சையில் சித்தி (2ம் தரநிலை ) நிறைவு செய்த இவர் நிந்தவூர்.20 தமிழ்ப்பிரிவில் முதலாவது சட்ட பீட பட்டதாரி ஆவார்.
இவர் ,நிந்தவூர் அல் மஸ்லம் வித்தியாலயம் மற்றும் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியை பயின்று, பின்னர் காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் தனது உயர்கல்வினை தொடர்ந்தார்.
சட்டமாணி இளங்கலை சட்ட பீட பட்டதாரியாக 2ம் வகுப்பு உயர்மட்டத்தில் சித்தியெய்திய, நிந்தவூர் 20ம் பிரிவைச் சேர்ந்த வரதராஜன் றினோஜி எதிர்காலத்தில் சட்டத்துறையில் சிறந்து விளங்க ,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் வாழ்த்து செய்தியில் "நாமும் காரைதீவு மண் சார்பாக வாழ்த்துகின்றோம் "என்று குறிப்பிட்டுள்ளார்.
றினோஜி தமிழ் இனத்தைச் சேர்ந்த முதலாவது மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment