சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அதன் முகாமைத்துவ சபை உறுப்பினராக இருந்து மரணித்த மர்ஹும் ஆர்.எம்.றினோஸ் அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்டு வரும் மர்ஹும் ஆர்.எம்.றினோஸ் ஞாபகார்த்த T20 கடின பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடர் சாய்ந்தமருது வொலிவேரியன் பொது விளையாட்டு மைதானத்தில் (16)கோலாகலமாக ஆரம்பமானது.
கழகத்தின் பிரதி தலைவர் யூ.எல்.பாஹிம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கழகத்தின் தவிசாளர் எம்.ஜே.எம்.காலித் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்,கெளரவ அதிதிகளாக கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களான எம்.ஏ.அஸ்தர் (பிரதி அதிபர், அல்-பஹ்ரியா வித்தியாலயம்,கல்முனை), யூ.கே. நஜீம் (ஆசிரியர்),பொறியிலாளர். எம்.எல். நவாஸ் அவர்களுடைய தந்தை ஏ. மூஸா லெப்பை அவர்கள்,ஏ.ஏல்.ஏ.நாஸர் (ஏ.ல்.ஏ.என்.கென்ஸ்ரக்ஸன்),
எஸ்.பஸ்மீர்(பஸ்மீர் பிரஸ் பிஸ்) மற்றும் சிறப்பு அதிதிகளாக மறைந்த மர்ஹும் ஆர்.எம். றினோஸ் அவர்களின் சகோதரர்களான ஆர்.எம்.றனீஸ், ஆர்.எம். தானிஸ்,ஆர்.எம்.தஸ்கீன் ஆகியோருடன் மாமாவான ஏ.ஹாறூன் மற்றும் சாய்ந்தமருது அல்-அமானா நற்பணி மன்றத்தினுடை தலைவர் அல்ஹாஜ். பரீட்,சாய்ந்தமருது பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினுடைய தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை,கழகத்தின் ஆலோசகரான எஸ்.எம்.அமீர்,சமூக சேவைப் பிரிவின் தலைவர் அல்ஹாஜ்.ஏ.எல். றிஸ்வி,முகாமையாளர் யூ.எல்.பரீட், தேர்வுக் குழு உறுப்பினர் எம்.ஏ.ஜனுசர், ஐ.முபாரக், ஐ.றியாஸ் மற்றும் கழகத்தின் ஏனைய உயர் பீட உறுப்பினர்களுடன் அம்பாறை மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பீ.எம். றஜாய் அவர்ளும் தோழமைக் கழகங்களான பீமாவினுடை கழகத் தலைவர்,மாவடி பேர்ள்ஸினுடைய தலைவர் அவர்கள் மற்றும் கழகத்தின் முன்னாள் உறுப்பினர் எம்.எச்.எம். சஹாப் (தாரிக்) ஆகியோர்கள் கலந்து சிறப்பித்துடன் ஆரம்ப முதல் போட்டியாக சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக்கழம் மற்றும் மாவடிப்பள்ளி மாவடி பேல்ஸ் அணிகள் போதின இதில் மாவடி பேல்ஸ் அணியினர் 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது.
0 comments :
Post a Comment