சாய்ந்தமருது அல் ஹிலால் தெற்கு வீதியில் குழிகள் காணப்படுவதால் மக்கள் பயணிப்பதில் சிரமம்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது அல் ஹிலால் தெற்கு வீதியில் சின்னப் பள்ளி வீதியும் , நீர் வழங்கல் வடிகாலமைப்பு அலுவலக வீதியும் சந்திக்கும் சந்தியில் அமைந்துள்ள கொங்கிறீட் வீதி பல மாதங்களாக சேதமடைந்து குன்றும் குழியுமாக காணப்படுவதால் வீதியில் பயணிக்கும் மக்களும் வாகன சாரதிகளும் பலவிதமான அசெளகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
தற்போது இப் பிரதேசத்தில் அடைமழை பெய்து வருவதனால் வீதியிலுள்ள பாரிய குழிகளில் நீர் தேங்கி காணப்படுவதால் அடிக்கடி வீதி விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன.
இவீவீதியில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம் அமைந்திருப்பதால் தினசரி பாடசாலை மாணவர்களும் பயணிப்பதால் அவர்களும் சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :