ஏறாவூர் மிச் நகர் மஸ்ஜிதுல் பறகாவில் இயங்கிவரும் மஃஹதுல் பறகா குரான் மத்ரசாவின் ஹிப்ழு முடித்த மாணவர்களுக்கு பட்டமளிக்கும் விழா இன்று இடம் பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம் ஹிஸ்புழ்ழாஹ் கலந்து கொண்டு ஹிப்ழு முடித்த மாணவர்களுக்கு நினைவு சின்னத்தினை வழங்கி கௌரவித்தார்.
அத்தோடு இம்மத்ரசாவின் மௌலவி ஆசிரியர்களுக்கு முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம் ஹிஸ்புழ்ழாஹ் நியமன கடிதத்தை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று முன்னாள் தவிசாளர் நாகமணி கதிரவேல், ஏறாவூர் மிச் நகர் பறகா பள்ளிவாயல் தலைவர் சபூர்தீன், ஏறாவூர் நகர சபை முன்னாள் பிரதி தவிசாளர் ரபுபாசம், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம். கமால்தீன், எம்.எஸ்.எம். ஐயூப், சாஜித் முன்னாள் ஆளுநரின் இணைப்பு செயலாளர் றுஸ்வின் மற்றும் பள்ளிவாயல் பேஸ் இமாமும் அரபுக் கல்லுரியின் அதிபர் மௌலவி முஹம்மட் ராபி அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த பள்ளிவாயல் மற்றும் அரபுக்கல்லூரின் கட்டடத்திற்கு பங்களிப்பு வழங்கிய முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கு பள்ளிவாயல் நிர்வாகம் மற்றும் இப்பிரதேச மக்களால் அவரை கௌரவித்து நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment