அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டன் முன்னெடுப்பு !




சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
ல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எஸ்.ஐ.எம் கபீரின் வழி காட்டலின் கீழ் சுகாதார மேற்பார்வைப் பரிசோதகர் ஐ.எல். றாஸிக் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள், டெங்கு களத்தடுப்பு உத்தியோகத்தர்கள்,சம்மாந்துறை லயன்ஸ் கழகம் இணைந்து கடந்த வியாழக்கிழமை (15) சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வீட்டுக்கு வீடு பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் 320 வீடுகளில் மேற்கொள்ளப்பட்டதாகவும், நுளம்பு பரவலில் இனம் காணப்பட்ட 10 பேருக்கு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும்,. டெங்கு நுளம்பு பரவக்கூடிய 35 இடங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் சிவப்பு எச்சரிக்கை அட்டைகள் 10 ஒட்டப்பட்டதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை1,2,3, மட்டக்களப்பு தரவை 1,தமிழ் பிரிவு 1,2,3,4 கிராம சேவையாளர் பிரிவுகளில்
திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது .

சுகாதார மேற்பார்வைப் பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவையாளர்கள், டெங்கு களத்தடுப்பு உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை லயன்ஸ் கழகம் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :