மட்டக்களப்பு ஏறாவூர் லயன்ஸ் சுப்ரீம் கழக அமைப்பினரால் நீரழிவு நோய் விழிப்புர்ணவு எனும் தொழில் பொருளில் இன்று லயன்ஸ் கழகத்தலைவர் ARM ஆசிக் தலைமையில் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள மௌலானா பூங்காவில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக ஏறாவூர் நகரசபை தவிசாளர் MS.நழிம், ஏறாவூர் நகரபிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத், ஏறாவூர் நகரசபை செயலாளர் எம்.எச்.எம் ஹமீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் மருதமுனையில் இருந்து வருகை தந்த விரிவுரையாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட சைக்கின் கிறின் அமைப்பினரும் , கிளின் & கிறின் லயன்ஸ் கழகத்தலைவர் ARM ஆசிக் லயன்ஸ் கழகச் செயலாளர் VTA கபூர் அமைப்பினரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
வருகைதந்த சைக்கிள் கிறின் மற்றும் கிளின் & கிறின், லயன்ஸ் கழக அமைப்பினரும் இணைந்து வாவிக்கரை வீதியில் இருந்து கிழக்கு புற்று நோய் பராமரிப்பு நிலையத்திற்கு துவிச்சக்கர வண்டி மூலம் பயணம் செய்து கிழக்கு புற்று நோய் பராமரிப்பு நிலையத்திற்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 50 பலா மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர்.
கிழக்கு புற்றுநோயாளார் நிலையத்தில் இருக்கும் நோயளிகளிக்கு அவர்களின் தேக ஆரோக்கியத்திற்காக இலைக்கஞ்சி மற்றும் தூய பசும் பால் வழங்கி வைக்கப்பட்டது
கிழக்கு புற்றுநோயாளார் நிலையத்தினால் புற்று நோயாளர்கள் பாரமரிப்பு மற்றும் புற்றுநோய் சார்ந்த விசேட விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது. ஊர் பிரமுகர்களும் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாறா மெளஜூத் இது போன்ற செயற்பாடுகளை லயன்ஸ் கிளப்பினர்களும் கிறின் சைக்கிள் கிளப்பினர்களும் இணைந்து இந்தா திட்டமானது மக்கள் மத்தியில் சிறந்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நினைக்கின்றேன் அந்த வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக சமுக மத்தியிலும் கிராம மத்தியிலும் மக்கள் மத்தியிலும் கொன்று சென்று இப்படிப் போன்ற விழிப்புணர்வுகளை லயன்ஸ் கிளப்பினர்கள்
செயல்களை செய்ய முன்வர வேண்டும் என பல வழுவாளர்களைக் கொண்டு இப்படிப் போன்ற செயல்களை செய்ய முன்வர வேண்டும் என முன்னெடுக்க வேண்டும் என வேலைகளைச் செய்ய ஏறாவூர் பிரதேச செயலகம் பூரண ஒத்துழைப்பு தரும் என உறுதியளிக்கின்றேன் குறிப்பிடார்.
0 comments :
Post a Comment