ஆயுள்வேத பரம்பரை வைத்தியர்களுக்கான ஒருநாள் செயலமர்வு!



அலா சிபாக் -
திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத ஆயுள்வேத பரம்பரை வைத்தியர்களுக்கான ஒருநாள் செயலமர்வு (22) திருகோணமலை முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வுக்கு சுகாதார அமைச்சின் சுதேச மருத்துவ அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் பி.தயானந்தன் அவர்களும், கொழும்பு ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்தியர்களான ரீ.சிவகுமார், லலித் அலவத்கொட அவர்களும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள திட்டமிடல் பிரிவின் வைத்தியர்களான எஸ்.சிவச்செல்வன், எஸ்.சதீஸ் உள்ளிட்ட வைத்தியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இச்செலமர்வில் பரம்பரை வைத்தியர்கள் தொடர்பான சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுக்க நெறிமுறைகள் பற்றி இடம்பெற்றது. குறிப்பாக, நோயாளர்கள் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், தொழில் தொடர்பாகவும் அதே தொழிலில் ஈடுபட்டுள்ள சக வைத்தியர்கள் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், சமூகம் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான நெறிமுறைகள் பற்றியே இச்செலமர்வு இடம்பெற்றது.

பரம்பரை வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பதிவு செய்யும் நடைமுறைகள் பற்றி பரம்பரை வைத்தியர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிக விரிவான விளக்கங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதுடன் கொழும்பு ஆயுள்வேத திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்பட்ட சித்த மருந்து முறையியல் பதார்த்த விஞ்ஞானம் பகுதி - 1 என்ற நூலை சுகாதார அமைச்சின் சுதேச மருத்துவ அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் பி.தயானந்தன் அவர்களினால் மாகாண ஆணையாளர், வைத்தியர்கள் மற்றும் பரம்பரை வைத்தியர்கள் ஆகியோர்களுக்கு வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :