22 வருடம் சேவையாற்றிய உயிர் மருத்துவ பொறியியலாளர் ரவிச்சந்திரனுக்கு பிரியாவிடை!



வி.ரி. சகாதேவராஜா-
ல்முனை பிராந்திய சுகாதார திணைக்களத்தில் 22 வருடங்கள் உயிர் மருத்துவ பொறியியலாளராக சேவையாற்றி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லும் இராசையா ரவிச்சந்திரனுக்கு பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் பொறியியலாளர் ரவிச்சந்திரனுக்கு நேற்று முன்தினம் சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது.
காரைதீவைச் சேர்ந்த பொறியியலாளர் ரவிச்சந்திரனுக்கு காரைதீவு வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் நடராஜா அருந்திரன் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
அச்சமயம் வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பாராட்டினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :