திருகோணமலை,குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (14) இடம் பெற்றது.
முஸ்லிம் எயிட் நிறுவனம் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்வாதார திட்டத்தின் ஊடாக இது நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது
இதில் இரண்டு மீன் பிடி படகுகள், இரண்டு மீன் பிடி இயந்திரங்கள் மற்றும் மீன்பிடி வலைகள் மற்றும் ஏனைய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது .
குறித்த பகுதியில் மீனவர்களுடை வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசின் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைய உணவு உற்பத்தி மற்றும் அதனோடு இணைந்த திட்டத்துக்கு பங்களிக்கும் வகையில் இவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக குச்சவெளி பிரதேச செயலாளர் கே. குணநாதன் , முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் பஸ்லான், மீனவர் சங்க உறுப்பினர்கள் ,முஸ்லிம் எயிட் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment