மாளிகைக்காடு பிரதேசத்தின் முதலாவது புள்ளிவிபரவியல் உத்தியோஸ்தர் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.அஜ்வத் அரச சேவையிலிருந்து ஓய்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய( தேசிய பாடசாலை ) ஸ்தாபக அதிபர் மர்ஹும் ஏ.ஸி.எம்.இப்றாஹிம் , மர்ஹுமா ஹாஜியானி கதீஜா உம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரான சிரேஸ்ட புள்ளிவிபரவியல் உத்தியோகத்தர் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.அஜ்வத் (Bsc)14.01.2023 அன்று தனது 60வது வயதில் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

தனது ஆரம்பக் கல்வியை சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்திலும் , இடைநிலை மற்றும் உயர் கல்வியினை கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியிலும் , பேராதனை பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பட்டப்படிப்பையும்., கொழும்பு பல்கலைக்கழகத்தில் சனத்தொகை கல்வி பட்டப்படிப்பையும் மேற்கொண்ட இவர் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புலமைப் பரிசில் மூலம் தாய்லாந்திற்கு சென்று அங்கு விசேட கணினி கற்கை நெறியினை மேற்கொண்டிருந்தார்.

தனது 36 வருட அரச சேவையை
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேச செயலகத்திலிருந்து ஆரம்பித்து கொழும்பு புள்ளிவிபரவியல் திணைக்கள கணக்காய்வுப் பிரிவு , சம்மாந்துறை பிரதேச செயலகம் , உகன பிரதேச செயலகம் , ஏறாவூர் பிரதேச செயலகம் , நிந்தவூர் பிரதேச செயலகம் , அக்கரைப்பற்று பிரதேச செயலகம் , கொழும்பு பதிவாளர் நாயகம் அலுவலகம் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

கணினித்துறையில் இவரது இணையத்தளமான www.jobloog.com மூலம் வெளிநாடுகளில் தொழில்தேடுவோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் , கணிதத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு www.mathswikipedia.com இணையத்தளமும் பிரயோசனமுள்ளதாக அமைந்துள்ளது.

ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் மர்ஹும் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.அஸ்றப் , ஓய்வுபெற்ற ஆசிரியரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான எம்.ஐ.எம்.அஸ்ஹர் ஆகியோரின் இளைய சகோதரரான இவர்
விளையாட்டு துறையிலும் சமூகசேவையிலும் மிகவும் ஈடுபாடுள்ளவர்
இவரின் ஓய்வுகாலம் சிறப்புற வாழ்த்துக்கள்..

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :