போதைக்கு எதிராக ஜும்மா தொழுகையின் பின்னர் ஒன்றுதிரண்ட மக்கள்!



எச்.எம்.எம்.பர்ஸான்-
போதைவஸ்து விற்பனை மற்றும் பாவனைக்கு எதிரான கண்டன பேரணியொன்று வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது.

வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பள்ளிவாயல்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்த இவ் கண்டனப்பேரணி அதன் தலைவர் அஷ்ஷெய்ஹ் எம்.ரீ.அப்துர் ரஹ்மான் அஸ்ஹரி தலைமையில் இடம்பெற்றது.

ஜும்மா தொழுகையை தொடர்ந்து செம்மண்ணோடை குபா ஜும்மாப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய விளையாட்டு மைதானம் வரை இப்பேரணி சென்றது.

போதையற்ற கிராமம் ஒழுக்கமுள்ள இளைஞர் சமூகம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற பேரணியில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.

இதில், வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர். பண்டார, சட்டத்தரணி எம்.எம்.எம்.ராசிக், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் மற்றும் பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைகளில் ஈடுபடும் நபர்களின் சமூக, சமய ரீதியான எவ்வித செயற்பாடுகளிலும் பொதுமக்கள் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானம் தீர்மானம் எடுக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :