2023ஆம் ஆண்டுக்கான கிண்ணியா கலாசார அதிகார சபையின் புதிய நிருவாகத் தெரிவு (25) கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
அதன் தலைவராக கிண்ணியா பிரதேச செயலாளரும், ஒருங்கிணைப்பாளராக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தரும் யாப்பின் பிரகாரம் செயற்படுவர். ஏனைய நிறைவேற்று உறுப்பினர்கள் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மது கனி தலைவராகவும்,கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எம். ஹில்மி ஒருங்கிணைப்பாளராகவும்,கலாபூஷணம் அ.கௌரிதாசன் உப தலைவராகவும்,எம்.ரீ. சஜாத் செயலாளராகவும்,எம்.ஏ.முகமட் உப செயலாளராகவும்,என்.எம். நஜாத் பொருளாளராகவும்,
எம். ஏ.அக்பர் சலீம் (ஒய்வு பெற்ற அதிபர்)ஆலோசகராகவும் தெரிவு செய்யப் பட்டனர்.
0 comments :
Post a Comment