சமாதானப்புறா பறக்க விடப்பட்டு அரச சத்தியப்பிரமாணம் எடுத்த நிகழ்வு நேற்று (2) திங்கட்கிழமை இடம் பெற்றது.
கல்முனை ஆதாரவைத்திய சாலையில் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது.
புத்தாண்டில் அரச அலுவலக கடமைகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கும் முதல் நாள் நிகழ்வில், முன்னதாக தேசிய கொடியேற்றத்துடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதில் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா முரளீஸ்வரன் மற்றும் பிரதி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜெ.மதன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
மற்றும் வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் , ஊழியர்களும் கலந்து முதல் நாள் சத்தியபிரமாண நிகழ்வில் பங்குபற்றினர்.
இந் நிகழ்வில் மரம் ஒன்றும் நடப்பட்டது.மேலும் சமாதானத்திற்காக புறா ஒன்றும் பறக்கவிடப்பட்டது.
இறுதியாக நிர்வாக உத்தியோகத்தர் தோமஸ் தேவருளினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.
0 comments :
Post a Comment