ஜக்கிய தேசிய கட்சியின் அம்பகமுவ பிரதேசசபையின் முன்னாள் தலைவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

பொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ்-
நோர்வூட் பிரதேசசபையின் செயற்பாடுகளுக்கு இடையூரு விளைவித்தமை தொடர்பில் ஜக்கிய தேசிய கட்சியின் அம்பகமுவ பிரதேசசபையின் முன்னாள் தலைவர் ரவிந்தினுக்கு எதிராக நோர்வூட் பிரதேசசபையின் செயலாளரினால்
நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் 11.01.2023 புதன்கிழமை மாலை இந்த முறைபப்பாடு பதிவு செய்யப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நோர்வூட் பிரதேசசபையின் கீழ் இயங்கும் டிக்கோயா புளியாவத்தை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதி பத்திரமின்றி கோழி இறைச்சி விற்பனை செய்து வந்த வர்த்த நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள சென்றிருந்த நிலையில் அங்கு சென்ற நோர்வூட்பிரதேசசபையின் அதிகாரிகளுக்கு ஜக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அம்பகமுவ பிரதேசசபை தலைவர் முருகையா
ரவிந்திரனால் இடையூறு ஏற்படுத்தியதோடு அங்கு அமைதியின்மையும் ஏற்பட்டது
.
இதேவளை குறித்த கோழி இறைச்சி கடை உரிமையாளர் இறுதியாக 2020ம் ஆண்டு நோர்வூட் பிரதேசசபையிடம் இருந்து பெறப்பட்ட அனுமதி பத்திரத்தினை வைத்தி கொண்டு இந்த ழூன்று ஆண்டுகள் அனுமதி பத்திரம்


பெறாது கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வருவதாக நோர்வூட் பிரதேசசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைபாட்டிற்கு அமைய அங்கு அதிகாரிகள் கென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற பிரதேசசபையின் செயலாளர் மற்றும் ஏனய உத்தியோகத்தர்களை முன்னாள் அம்பகமுவ பிரதேசசபையின் தலைவர் முருகயைா ரவிந்திரன் தகாத வார்தை பிரயோகங்களை பாவித்ததோடு அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரின் சேவைக்கும் இடையூறுரினை ஏற்படுத்தினார் . இந்த
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :