பல நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த மருதமுனையின் முதல் பள்ளிவாசலான மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முகர்ரப் தலைமையிலான நிருவாகத்தினரின் பங்களிப்புடன் பள்ளிவாசலின் கட்ட புனர்நிர்மானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதன் முதற்கட்டப் பணியாக பள்ளிவாசலின் கீழ் தளத்திற்கு தரை ஓடுகளைப் பதிக்கும் வேலைத்திட்டம் கடந்த சனிக்கிழமை(2023-01-07)ஆரப்பித்துவைக்கப்பட்டது.
வர்த்தகரும்.சமூக சேவையாளருமான எம்.ஐ.அப்துல் பரீட் தனது சொந்த நிதியில் சுமார் நான்கு மில்லியன் ரூபா செலவில் தரை ஓடுகளை அன்பளிப்பாகப் பெற்றுக் கொடுத்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.சனப்பெருக்கம் அதிகரிக்க அதிகரிக் காலத்திற்குக் காலம் நவீனத்திற்கு ஏற்ப பள்ளிவாசலை புனரமைக்க வேண்டி தேவை ஏற்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே இந்தப் புனரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
0 comments :
Post a Comment