கல்வி அமைச்சின் ஆசிரிய கல்விப் பிரிவுக்குப் பொறுப்பான பதில் பிரதம ஆணையாளர் திருமதி H.H.V.M. சஞ்சீவனி 27.01.2023 நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரிக்கு விஜயம் செய்திருந்தார் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை ஆசிரிய பயிலுனர்களாக உள்ளீர்ப்பதற்கான நேர்முகப்பரீட்சை நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக அவர் விஜயம் செய்திருந்தார். இச் சந்தர்ப்பத்தில் ஆசிரிய கல்வியியலாளர்களுக்கான கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார் இக்கூட்டம் கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கி. புண்ணியமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் விரிவுரையாளர்களது வினாக்களுக்கு பிரதம ஆணையாளர் பதிலளித்தார். அதில் முக்கிய வினாவாக 'வருடாவருடம் 25 ஆசிரிய பயிலுனர்களுக்கு மேல் இஸ்லாம் பாடநெறிக்கு அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரிக்கு அனுமதிக்கப்படும் அதேவேளை இம்முறை 2019 மற்றும் 2020 ஆகிய இரு ஆண்டுகளிலும் மொத்தமாக 20 ஆசிரிய பயிலுனர்கள் மாத்திரமே உள்ளீர்க்கப்படுவதற்கான காரணம் என்ன'? எனும் வினா அமைந்திருந்தது. அதற்குப் பதிலளித்த பிரதம ஆணையாளர் வழமையாக வர்த்தமானி வெளியிடுவதற்கு முன்னர் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களிடம் வெற்றிடங்கள் தொடர்பிலான தரவுகளைச் சேகரிப்போம் இம்முறை 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்காக எந்தவிதமான வெற்றிடமும் காட்டப்படவில்லை மேலதிக ஆளணியினரே காட்டப்பட்டனர். இஸ்லாம் சமயத்திற்கு மாத்திரமன்றி கிறிஸ்தவ மற்றும் பௌத்த சமயங்களுக்கும் இந்த நிலையே காட்டப்பட்டிருந்தது வர்த்தமானி வெளியிடுவதற்கு முன்னர் அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 65 ஆகக் காணப்பட்டதும் இதற்குக் காரணமாகும். அதாவது ஒய்வு பெறும் வயது 60 ஆகக் குறைக்கப்படுவதற்கு முன்னரேயே வர்த்தமானி வெளியிடப்பட்டுவிட்டது. இதன் காரணமாக பூச்சிய நிலையைக் காட்டக்கூடாது என்பதற்காகவே சிறிதளவு தொகையினர் காட்டப்பட்டனர் எனக் குறிப்பிட்டார் இது தொடர்பில் பூரண விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரிவுரையாளர்கள் அவருக்குத் தமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர். மேலும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரில் காணப்படும் கழிவுநீர் வெளியேற்றம் தொடர்பிலான பிரச்சினை தொடர்பில் பீடாதிபதி சட்டத்தரணி கி. புண்ணியமூர்த்தி அவர்கள் நேரடியாக அழைத்துச் சென்று காட்டியபோது விரைவில் இப்பிரச்சினையைத் தீர்த்துத் தருவதாக பிரதம ஆணையாளர் உறுதியளித்தார்.
0 comments :
Post a Comment