பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தி
யாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடியில் பாடசாலை அதிபர் திரு.எம்..சபேஸ் குமார் அவர்களின் வேண்டு கோளிற்கிணங்க பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களாலும் பழைய மாணவியாலும் பாண்டு வாத்திய உபகரணங்களும் அவற்றுக்கான தொப்பிகளும் மாணவர்களது பாவனைக்காக அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (12) இடம்பெற்றது.
பாடசாலை மாணவியின் பெற்றோரான களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த
திருமதி.எம்.பிரபாஜினி பாண்டு வாத்திய கருவிகளையும் ,
பழைய மாணவியான களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த திருமதி.ஜ.பிரதா
பாண்டு அணியின் தொப்பிகளையும் அன்பளிப்பு செய்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா உத்தியோகஸ்தர்கள் , பெற்றோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment