ரஸ்சியாவில் நடைபெற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவரகளுக்கிடையிலான "அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப்" போட்டியில் சாய்ந்தமருதைச் சேர்ந்த வைத்தியர் அஸ்ஜத் அசீஸ் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
ரஸ்சியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் விளையாட்டு துறை அமைச்சரினால் நடாத்தப்பட்ட இப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றமைக்கான சான்றிதல்களும் பதக்கங்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும் இவர் 2022ம் ஆண்டின் கிளாசிக்கள் சதுரங்க போட்டியின் சம்பியனும், சதுரங்க பயிற்றுவிப்பாளரும்,
ஸஹ்ரியன் நெயிட்ஸ் சதுரங்க கழகத்தின் தலைவரும், கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதும் குற்ப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment