முஸ்லிம் எய்ட்ஸினால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், பாதணி வவுச்சர், தளபாடங்கள் வினியோகத்துடன், புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பாடசாலைக் கட்டடங்கள் கையளிப்பு



முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 2022/23 கல்வி மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், தம்பலகாமம் தி/கந்/கல்மெடியாவ வித்தியாலயம், தி/கிண்/புகாரி நகர் முஸ்லிம்
மகாவித்தியாலயம் , தி/கிண்/ பாதிமா பாலிகா மகாவித்தியாலயம் மற்றும் தி/பாரதிபுரம் பராசக்தி தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான 42 சைக்கள்கள், 604 கற்றல் உபகரணங்கள் (School Bags), 604 பாதணிகள், தளபாடங்கள் போன்றவற்றைக் கையளிக்கும் நிகழ்வுகளுடன், புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களைக் கையளிக்கும் நிகழ்வுகள் நேற்றும் 12ம் திகதியாகிய சிறப்பாக நடைபெற்றன.

தி/கந்/கல்மெடியாவ வித்தியாலத்தில் நடைபெற்ற நிகழ்வில் கந்தளாய் வலய பிரதிக் கல்விப் பணிப்பாள P.H.காமினி பண்டாரவும் , தி/கிண்/புகாரி நகர் முஸ்லிம் மகாவித்தியாலயம், தி/கிண்/ பாதிமா பாலிகா மகாவித்தியாலய நிகழ்வில் கிண்ணியாக வலயக் கல்விப் பணிப்பாளர் A. நஸூகர் கானும், தி/பாரதிபுரம் பராசக்தி தமிழ் வித்தியாலய நிகழ்வில் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் S.சிறீதரன் ஆகியோரும் பிரதம அதிதிகளாகப் பங்கேற்றனர்.

மேற்படி நான்கு நிகழ்வுகளிலும் அந்தந்த பாடசாலைகளுக்கான அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்களுடன் முஸ்லிம் எய்ட் சிரேஷ்ட மற்றும் களச் செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர். தமது முகங்களில் களிப்புடன் மாணவர்கள் பிரதம அதிதிகளையும் அதிதிகளையும் வரவேற்றனர்.
கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை சிக்கியிருக்கும் நிலையில், வறிய, பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட முஸ்லிம் எய்ட் இன் உதவிகளை வலயக் கல்விப் பணிப்பாளர்களும் பாடசாலை சமூகத்தினரும் விதந்து வரவேற்று நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :