டீ-20 சுதந்திரக் கிண்ணம் - 2023 : வெற்றிக் கிண்ணம் பாலமுனை ட்ரைஸ்டார் வசமானது.




நூருல் ஹுதா உமர்-
பாலமுனை ட்ரைஸ்டார் மற்றும் பாலமுனை அல் அறபா அணிகளுக்கிடையிலான ஷிஹாப் கூல் எண்ட் கொட் மார்ட் சுதந்திர தின வெற்றிக்கிண்ண டீ 20 கடினப்பந்து போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (09.02.2023) மாலை இடம்பெற்றது.

நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற அறபா அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் முடிவில் 138 ஓட்டங்களை பெற்றது. பாலமுனை அல் அறபா அணி சார்பில் றிபான் 26 ஓட்டங்களும் அம்ஜத் 36 ஓட்டங்களையும் பெற்றதோடு பாலமுனை ட்ரைஸ்டார் வீரர்களான சாஜின் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் ஆஷிக் 2 விக்கட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ட்ரைஸ்டார் அணி 9 விக்கட்டுகளை இழந்து 19.3 ஓவரில் 139 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

பாலமுனை ட்ரைஸ்டார் வீரர் எஸ்.டீ. பாயிஸ் 37 ஓட்டாங்களையும் கியாஸ் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். இந்த போட்டியின் சிறப்பாட்டக்காரராக பாலமுனை ட்ரைஸ்டார் வீரர் எஸ்.டீ .பாயிஸ் தெரிவு செய்யப்பட்டதுடன் சகலதுறை வீரராக றிபான் தெரிவு செய்யப்பட்டார். இப்போட்டியின் பிரதம அதிதியாக ஆசிரியர் ஐ.எல்.எம்.பாயிஸ் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். றியாஸ், எம்.ஐ.மனாப் ,என்.டீ.அல்பி, சிபான் அஸீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :