2023 ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கள் விழா





அபு அலா-
யன்களை எதிர்பாராமல் நன்நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமூக சேவைகளை, சமூக வெளியில் கொண்டு செல்லாம் பல்வேறுபட்ட உதவிகளைச் செய்து வருகின்றவர்ளூடாக, கற்றுக்கொண்ட பாடங்களையும், அவர்களின் முன்மாதிரியான செயற்றிட்டங்களைப்பற்றி இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக முன்னிருத்தி செயற்படவேண்டும். அப்போதுதான் இளம் தலைமுறையினர் இவ்வாறான பணிகளைச் செய்ய முன்வருவார்களென சமூக சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஏ.ஜி.தெய்வேந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலை அன்பின் பாதை சமூகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் “விளிம்புநிலை மக்களின் வாழ்வை ஒளியேற்ற தம் வாழ்நாளினை அர்ப்பணிக்கும் பெருமக்களை கொண்டாடி மகிழல்” என்ற தொனிப்பொருளில் அறம் செய்வோம் அறக்கட்டளையின் முதலாவது அகல் விருது - 2023 வழங்கள் விழா நேற்று (18) திருகோணமலை நகரசபை நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக சேவைகளைச் செய்யவேண்டும் என்ற நன்நோக்கில் இளம் வயதிலிருந்தே தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டுவருகின்ற சன்முகா மகளிர் இல்லத்தின் முகாமையாளர் செல்வி விமலா நடராஜாவின் சமூக சேவைகளைப் பாராட்டியாக
வேண்டும். அவர் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு மறைமுகமாக பல்வேறுபட்ட சமூக சேவைகளைச் செய்து வருவதென்பது மிக இலகுவான விடயமல்ல. அது கடும் சவால் மிக்கதொன்றாகும். இவ்வாறான பணிகளைச் செய்து வருகின்றவர்கள் தங்களின் சேவைகள் சமூக வெளியில் கொண்டு செல்வதை எதிர்பார்ப்பதும் இல்லை, விரும்புவதும் இல்லை.

இவரைப்போன்ற பலர் இன்னும் மறைமுகமாக இருந்துகொண்டு செயற்பட்டு வருவார்கள். அவ்வாறானவர்களையும் அறம் செய்வோம் அறக்கட்டளை அடையாளம் கண்டு அவர்களின் நற்செயற்பாட்டினை இளம் தலைமுறையினர்களுக்கு எடுத்துக்காட்டி அவர்களையும் இவ்வாறான சமூக செயற்பாடுகளை முன்னெடுக்க நாம் உதவி புரியவேண்டும்.

அறம் செய்வோம் அறக்கட்டளை கடந்த மூன்றாண்டு காலமாக இலங்கையிலுள்ள காப்பகங்கள், வலையமைப்புக்கள், சமூக சேவை நிறுவனங்கள் ஊடாக சிறுவர்கள், விசேட தேவையுள்ளோர் மற்றும் முதியோர்களின் வாழ்வை மேம்படுத்த பல உதவிகளைச் செய்து வருகின்றார்கள். அவர்கள் மக்களின் மேம்பாட்டிற்காகவே தங்களின் நேரகாலங்களைச் செலவிடுகின்றனர். அவர்களின் சேவைகளுக்கு எங்களாலான உதவிகளைச் செய்ய முன்னிப்போம் என்றார்.

இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் (திருமதி) றிஸ்வாணி றிபாஸ், சமூக சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஏ.ஜி.தெய்வேந்திரன் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி சுபாசினி சித்திரவேல் உள்ளிட்ட பல அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கடந்த பல ஆண்டு காலமாக, தன்னலமற்ற ஒன்றிணைந்த எண்ணிலடங்கா சமூக சேவைகளைச் செய்துவருகின்ற சன்முகா மகளிர் இல்லத்தின் முகாமையாளர் செல்வி விமலா நடராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி 2023 ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுன் அவருக்கு 2 இலட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :