ஸவுதியின் நிதி சேகரிப்பு 37 கோடி ரியால்களை நெருங்கியது!



ண்மையில் துருக்கி மற்றும் ஸிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புக்கள் இன்னும் முழுமையாக கணக்கிட முடியாத நிலையில், இதுவரை 44000 (நாற்பத்தி நான்காயிரம்) பேர் வரை மரணித்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்ட முதல் நாளிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்கும் முயற்சிகளில் ஸவுதி அரேபியா இறங்கியுள்ளது. தன்னுடைய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகிறது. இதுவரை பல இராட்சத சரக்கு விமானங்களையும், மருத்துவர்கள், மீட்புக்குழுக்கள், தொண்டர்கள், கூடாரங்கள், மருத்துவ உபகரணங்களையும் அனுப்பி வைத்துள்ளது.

இதற்கிடையில் மன்னர் ஸல்மான், பட்டத்து இளவரசர் முகம்மது பின் ஸல்மானின் வழிகட்டலில் நிவாரணத்திற்கான ஸல்மான் மையத்தின் தலைமையில் பிரத்தியேகமாக ஸாஹிம் எனும் ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து ஸவுதி அரேபிய மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற இச்செயலியில் இதுவரை 1,648,696பேர் பங்களிப்புச் செய்துள்ளனர். 368,114,766 ரியால்கள் சேகரிக்கப்பட்டுள்ளது .

விமர்சனங்கள் தடைகளைத்தாண்டி மனிதநேயத்தை மாத்திரம் முதல்நிலைப்படுத்தி ஸவுதி அரேபியாவால் முன்னெடுக்கப்படும் இம்முயற்சி வெற்றியடையவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநிறைவும் சந்தோசமும் உருவாக பிரார்திப்போம்.

By: Dr. Ismail muhaideen Ph.D.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :