அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கைக்கான ஸவுதித் தூதுவர் ஹாலித் பின் ஹமூத் அல் கஹ்தானி மற்றும் ஸவுதி வளர்ச்சி நிதியத்தின் தூதுக்குழுவினரும் கலந்துகொண்டனர். இதில் சமகால முக்கியத்துவம் வாய்ந்த சில விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதே வேளை கொழும்பு நகர் கழிவு நீர்த்திட்டம், மின்சக்திப் பரிமாற்றம், மஹாவலிகங்கை அபிவிருத்தி (இடது கரை பிரிவு டீ), கொழும்பு நகர் மருத்துவ சேவைகள் அபிவிருத்தி, மட்டக்களப்பு - திருகோணமலை வீதி, கொழும்பு நகர் மருத்துவ சேவைகள் அபிவிருத்தி (மேலதிக கடன்), வலிப்பு மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்கள், களுகங்கை அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, பேராதனை - பதுளை - செங்கலடி வீதியை மேம்படுத்துதல், களுகங்கையின் இடது கரை அபிவிருத்தி, வயம்ப பல்கலைக்கழக பிரதேச அபிவிருத்தி, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுதல் போன்ற 12 திட்டங்களுக்காக ஸவுதி அரேபிய வளர்ச்சி நிதியம் இதுவரை 424.7மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment