மீராவோடை அல் ஹிதாயா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அணிகள் பங்குபற்றிய ஹிதாயன்ஸ் முக்கோண கிரிக்கெட் தொடரை 97 ஆம் ஆண்டு அணி சுவீகரித்துக் கொண்டுள்ளது.
குறித்த முக்கோண தொடரில் 1997, 1999, 2001 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர மாணவர் அணியினர் பங்குபற்றினர்.
முக்கோண சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை (24) மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் 97,99 ஆகிய இரண்டு அணிகள் மோதிக் கொண்டன.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 97 அணியினர் 15 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 119 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 99 அணியினர் 13 ஆவது ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 59 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக் கொண்டனர்.
சுற்றுத் தொடரின் வெற்றிக் கிண்ணம் வழங்கி வைக்கும் நிகழ்வு இரு அணிகளைச் சேர்ந்த தலைவர்களான ஐ.எம்.றிஸ்வின் (மொடர்ன் றிஸ்வி), பி.எம்.அலாவுதீன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரி. அஜ்மீர், கந்தளாய் வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.மர்சூக், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் எம்.பி.எம்.நபீர் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
சுற்றுத் தொடரில் தொடர் நாயகனாகவும், இறுதிப் போட்டி ஆட்ட நாயகனாகவும் 97 அணியைச் சேர்ந்த எஸ்.ஐ.முஹாஜிரீன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment