கிழக்கின் முதலாவது உளுந்து தோல் நீக்கும் இயந்திரம் தங்கவேலாயுதபுரத்தில். அம்பாறை அரச அதிபர் டக்ளஸ் திறந்து வைப்பு!



வி.ரி. சகாதேவராஜா-
கிழக்கிலங்கையின் முதலாவது உளுந்து தோல் நீக்கும் இயந்திரம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தங்கவேலாயுதபுரத்தில்
அம்பாறை அரச அதிபர் டக்ளஸினால் திறந்து வைக்கப்பட்டது.

திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரனின் அயராத முயற்சியால் இவ் இயந்திரம் பல லட்ச ரூபாய் செலவில் பெறப்பட்டுள்ளது.

இவ் இயந்திரம் கிழக்கு மாகாணத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் மட்டுமே உள்ளது .
பிரதேச செயலாளர் அவர்களின் நெறிப்படுத்திலின் ஊடாக திட்டமிடல் பிரிவின் கீழ் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் இவ் இயந்திரம் பெறப்பட்டுள்ளது.

இவ் வேலை திட்டத்தினை கடந்த செவ்வாய்க்கிழமை(31) அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் வைபவ ரீதியாக ஆரம்பித்தது வைத்தார்.

இவ் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், உதவி பிரதேச செயலாளர் .க.சதிசேகரன் ,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அனஸ் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எம்..அனோஜா மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :