மிகப்பெரும் ஆய்வாளரும் தொல்லியலாளருமான 'கலாபூஷணம்' நா.நவநாயகமூர்த்தி அவர்களை அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தினர் வீடுதேடிச்சென்று பாராட்டிக் கெளரவித்தனர்.
எழுத்தாளர் நவநாயகமூர்த்தியால் எழுதப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்ட அம்பாரை மாவட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களின் வரலாற்று ஆவணமாக கருதப்படும் 'பண்டைய மட்டக்களப்பு வரலாற்றில் அக்கரைப்பற்றும் தமிழரும்'
எனும் மிகப்பெரும் ஆய்வு நூலை தந்தமைக்காக இப்பாராட்டு நேற்று முன்தினம் (16)இடம் பெற்றது.
குருகுலப்பணிப்பாளர் கண இராஜரெத்தினம் தலைமையிலான குழுவினர் எழுத்தாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
0 comments :
Post a Comment