இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட குடிநீர் இணைப்புத்தொகுதி ரஹ்மத் மன்சூரினால் திறந்து வைப்பு !



எம்.என்.எம்.அப்ராஸ்-
ம்பாரை மாவட்டம் கல்முனை வலயக் கல்வி பிரிவில் உள்ள கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட நீர் இணைப்புத்தொகுதி ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டிலும்,வை.டப்ளியு.எம்.ஏ (YWMA) அமைப்பின்
அனுசரணையிலும் நிர்மாணிக்கப்பட்டு பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம்.றிஸாத் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (2023/2/14)இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் புதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்,கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவர் ரஹ்மத் மன்சூர் கலந்து கொண்டு குடிநீர் இணைப்புத்தொகுதியினை திறந்து வைத்தார்.

இதில் பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி. எஸ்.ஜே.ஏ.கபூர், பகுதித்தலைவர்களான எம்.ரி.ஏ.மனாப்,டி.கே.எம்.மௌஸீன்,ஆசிரியர்கள்,
கல்விசாரா ஊழியர்கள்,மாணவர்கள்,பெற்றார்கள்,
ஊர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

அத்துடன் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றதுடன் மேலும் நிகழ்வின் நினைவாக மர நடுகையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

கல்வியின் முக்கியத்துவம் கருதி 1987ஆம் ஆண்டு முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் முயற்சியினால் குறித்த கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம் ஸ்தாபிக்கபட்டமை
குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :