கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக இயங்கிவரும் இருதய நோய் சிகிச்சைப்பிரிவிற்கு தற்போது புதிய இருதய நோய் நிபுணராக பிரபல வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி டாக்டர் கசுன் துசியந்த
லொகுகெடகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிபெத்ஹொடையை பிறப்பிடமாக கொண்ட இவர் வைத்தியத்துறைக்கு
2014.12.02 ஆம் திகதி முதல் நியமனம் பெற்றார். மேலும் தேசிய வைத்தியசாலை இலங்கை சிரேஷ்ட மருத்துவ பதிவாளராகவும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர போதனா வைத்தியசாலையில் இருதயவியல் துறையின் சிரேஷ்ட பதிவாளராக கடமையாற்றியிருந்தார்.
தற்போது இடமாற்றம் பெற்று கல்முனை ஆதார வைத்தியசாலையில் இருதய நோய் நிபுணராக கடமையேற்றுள்ளார்.
இவர் ஓர் சிறந்த இருதயநோய் நிபுணராவார். கல்முனை ஆதார வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப்பிரிவானது
பல்வேறுபட்ட வசதிகளுடன் காணப்படுகின்றது. இங்கு 2D ECHO, Exercise ECG, 24
Hours Holder Monitoring, Cardiology Clinic, Refer for Angiogram போன்ற வசதிகளும் காணப்படுகிறது.
இந்த இருதய நோய் சாய்சாலையில் மாதந்தோறும் கிட்டத்தட்ட 400 நோயாளிகள் வருகை தருகின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும் 3800 இற்கு அதிகமான நோயாளிகள் இவ் இருதயநோய் கிளினிக்கிற்கு வருகைதந்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல் கல்முனை தொடக்கம் பொத்துவில் வரை கல்முனை தொடக்கம் வெல்லாவெளி வரை மற்றும் வெளி மாவட்டங்களிலும் இருந்து நோயாளிகள் இவ்வைத்தியசாலை இருதய நோய் சிகிச்சை மூலம் பயன்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்கழி மாதம் தொடக்கம் இன்றுவரையில் கிட்டத்தட்ட 48
நோயாளிகள் Angiogram பரிந்துரைக்காக வேறு வைத்தியசாலைக்கு
அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும்கடந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் 100 இற்கு மேற்பட்ட நோயாளிகள் Echo செய்து பார்ப்பதற்காக வருகை தருகின்றனர். இவ்வாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் திகழும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இருதயநோய் சிகிச்சைப்பிரிவு கல்முனை பிராந்தியம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் நோயாளிகளுக்கும் தனது மகத்தான மருத்துவ சேவையை
வழங்குவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment