அச்சாறு நிலையில் முஸ்லிம்களின் கட்சி அரசியல்
சுதந்திர இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி (UNP), ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி (SLFP) என்ற இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்த வரலாற்றினை புதிய கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) பெரும்பான்மை சமூகத்தின் துருவமயமாக்கல் உதவியுடன் உடைத்தெறிந்து சாதனை படைத்தது மாத்திரமன்றி எத்தேர்தலிலும் போட்டியிடாத, ராஜபக்ஷக்களின் தேர்தல் வெற்றிக்காக அமெரிக்க பிராஜாவுரிமையினை திறந்த கோட்டாபய ராஜபக்ஷவினை ஜனாதிபதியாக்கி உலகின் கவணத்தை திருப்பியது. இருந்த போதிலும், கொரோணா தாக்கம் அதனை தொடர்ந்த பொருளாதார நெருக்கடி பெரும்பான்மை சமூகத்தில் மக்கள் எழுட்சியினை ஏற்படுத்தி மிகக்குறுகிய காலத்தில் ஸ்ரீ.ல.பொ.பெ. (SLPP) வின் ஆட்சி முற்றுப்பெற்றது.
அதே நேரம் வரலாற்றில் முதல் முறையாக ஆண்ட பரம்பரையான ஐ.தே.க. (UNP) யின் படுதோல்வியினால் கிடைத்த ஒரே ஒரு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற ரணில் விக்கிரமசிங்க முதல் முறையாக பாராளுமன்ற வாக்கெடுப்பில் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படு சாதனை படைத்தார்.
தேசியக் கட்சிகளின் நிலை இவ்வாறு இருக்கையில் கட்சி அரசியலில் முஸ்லிம்களும் சளைத்தவர்கள் அல்ல என்றால் போல் கட்சிகள் பெருகி கட்சி அரசியல் ஏன் தேவை என்ற நோக்கம் மறக்கடிக்கப்பட்டு விட்டது. காலனித்துவ ஆட்சியிலும் சுதந்திர இலங்கையிலும் ஜனநாயக நீரோட்டத்தில் பல முஸ்லிம் தலைவர்கள் தங்கள் குடும்ப பரம்பரை, சொத்துக்கள், செல்வங்கள், கல்வி தகமைகளை வலுவாகப் பயன்படுத்தி பல உரிமைகளை தேசிய கட்சிகளில் பயணித்து பெற்றுக்கொடுத்தனர். ஆனால் கட்சி அரசியல் ஊடாக முஸ்லிம் சமூகத்தை தேசியரீதியில் அடையாளப்படுத்தி உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தவர் எம்.எச்.எம். அஷ்ரப் என்றால் மிகையாகாது.
வரலாற்றில் முதல் முறையாக நான்கு முஸ்லிம் கட்சிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள நிலையில் புதிய முஸ்லிம் கட்சியின் வரவும் தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் கட்சிகளின் சுருக்க வரலாற்றினை அறிவது காலத்தின் தேவையாகும்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் (All Ceylon Muslim League)
அ.இ.மு.லீ. (ACML) தலைவர் என்.எச்.எம். அப்துல் காதர் 1908 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு பின்னர் சட்டசபை (Legislative Council of Ceylon) உறுப்பினராகவும் செயற்பட்டார். இந்திய சுதந்திர போராட்ட செயற்பாட்டாளரான மௌலானா சவுகத் அலி குழுவினருக்கு இலங்கை தேசிய சபையினால் (Ceylon National Congress ) 1924 ஜனவரி 9 ஆம் திகதி பாரிய வரவேற்பு வழங்கப்பட்டது. இவர் பிரித்தானிய இந்தியாவில் கிலாபத் இயக்கத்தின் செயற்பாட்டாளரும் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் உறுப்பினருமாவார். இவரின் வரவு அ.இ.மு.லீ. (ACML) கின் செயற்பாடுகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
இலங்கையின் சுதந்திரத்திற்காக இதன் உறுப்பினர்கள் பல தியாகங்களை செய்துள்ளனர். அத்துடன் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதில் இலங்கையின் தேசிய சபையில் (CNC) ஆக்கபூர்வமான பங்களிப்பினை செய்துள்ளனர்.1946 ஆம் ஆண்டு ஐ.தே.க. (UNP) உருவாக்கத்தில் அ.இ.மு.லீ. (ACML) க்கின் பங்கும் உள்ளது. 1960 ஆம் ஆண்டு ஜூலை மதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அரசியல் கட்சிக்கான அந்தஸ்து கிடைத்த போதிலும் தேசியக்கட்சிகளில் முஸ்லிம்களின் செல்வாக்கு அதிகரித்தமையினால் இதன் அரசியல் செயற்பாடுகள் முற்றுப்பெற்றது. எனினும் அதன் சமூக சேவை நடவடிக்கைள் இன்றுவரை தொடர்கின்றது.
அகில இலங்கை மலாய் காங்கிரஸ் (All Ceylon Malay Congress)
கொழும்பு மலாய் கிரிக்கட் கழகம் (CMCC) 1872 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் அரசியல் பிரிவான அகில இலங்கை மலாய் கழகம் (ACMA) 1922 ஆம் ஆண்டு எம்.கே. சல்டீன் தலைமையில் உருவாக்கப்பட்டது. மலாய் சமூகத்தின் அரசியல் இருப்பை மையமாக வைத்து இ.தே.ச. (CNC) யில் கணிசமான பங்களிப்பினை அரசியல் பிரிவு வழங்கியிருந்தது. இவர்களின் முயற்சியால் மலாய் சமூகத்துக்கான சட்டசபை (Legislative Council of Ceylon) உறுப்பினராக 1924 ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திர செயற்பாட்டாளரான டி.பி .ஜாயா தெரிவுசெய்யப்பட்டார். பின்னர் 1936 ஆம் ஆண்டு இவ்வியக்கத்தின் தலைமைப் பதவியினையும் ஏற்றார்.
தங்களது அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்யும் நோக்கில் அ.இ.ம.கா (ACMalayC) 1944 ஆம் ஆண்டு வைத்தியர் எம்.பி. தரஹ்மான் MBE தலைமையில் உருவாக்கப்பட்டது. 1960 ஜூலை மாத பாராளுமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சிக்கான அந்தஸ்து கிடைத்தது. காலப்போக்கில் முஸ்லிம்களின் செல்வாக்கு தேசிய கட்சிகளில் அதிகரித்தமையினால் இக்கட்சியின் நடவடிக்கைகள் முற்றுப்பெற்றது. ஆனால் அ.இ.ம.கழக (ACMA) செயற்பாடுகள் இன்றுவரை தொடர்கின்றது. இக் கழகத்தின் தற்போதைய தலைவர் ரில்வான் லென்றா ஆவார்.
அகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னணி (All Ceylon Islamic United Front)
1957.10.17 ஆம் திகதி கல்முனை நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இஸ்லாமிய ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அ.இ.இ.ஐ.மு. (ACIUF) என்ற பெயரில் அரசியல் கட்சிக்கான அந்தஸ்து கிடைத்தது. எம். எஸ் காரியப்பர் இதற்கு தலைமை வகித்தார். அதே ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட போதிலும் ஆசனங்கள் எதனையும் பெறவில்லை. அன்று இன ரீதியான கட்சி அரசியலுக்கு முஸ்லிம் மக்களிடம் வரவேற்பின்மையினால் இக்கட்சி பின்னர் கைவிடப்பட்டது.
ஜனனாயக தேசிய முன்னனி (Democratic National Alliance)
1980 காலப்பகுதியில் முஸ்லிம் தேசிய கோட்பாட்டை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னனி (MULF) என்ற இயக்கத்துக்கு எம்.ஐ.எம். முகைதீன் தலைவராகவும் எம்.எச். சேகு இஸ்சதீன் செயலாளராகவும் செயல்பட்டனர். அக்கால தமிழ் மக்களின் ஆயுதப்போராட்ட சூழ்நிலையினாலும் ஆட்சியாளர்களின் வரவேற்பின்மையினாலும் முஸ்லிம் மக்களிடம் செல்வாக்குப் பெற வில்லை. இக்காலப்பகுதியில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை மக்கள்மயப்படுத்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் (SLMC) என்ற இயக்கமும் தனது பணிகளை தொடர்ந்து வந்தது.
இந்நிலையில், எம்.எச். சேகு இஸ்சதீன் அவர்கள் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீ.ல.மு.கா. (SLMC) ஸில் இனைந்தார். அவரின் வெற்றிடத்தை தொடர்ந்து எம்.எம். முஸ்தபா தலைமையில் மு.ஐ.வி.மு. (MULF) யின் பணிகள் தொடர்ந்தது. எம்.ஐ எம். முஹைதீன் செயலாளராக செயல்பட்டார். குதிரை சின்னத்துடன் அரசியல் கட்சியின் அந்தஸ்து கிடைத்த போதிலும் ஸ்ரீ.ல.மு.கா. (SLMC) ஸின் செல்வாக்கினால் இக்கட்சியின் நடவடிக்கைள் இஸ்தம்பிதமடைந்தது. பின்னார் எம்.ஐ.எம். முகைதீன் வேளிநாடு செல்ல நோர்ந்ததால் வஹாப் குழு இக்கட்சியினை வழிநடத்தினர்.
அக்காலகட்டத்தில் முஜிபுர்ரஹுமான் முற்போக்கு முஸ்லிம் முன்னணி என்ற பதிவு செய்யப்படாத கட்சியை நடத்திக் கொண்டிருந்தார். தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக முஜிபுர்ரஹுமான் மு.ஐ.வி.மு. (MULF) உடன் இணைந்து செயற்பட்டார். கதிரையில் தோர்தல் கேட்டு தோல்விகன்டதன் பின் அவர் நாட்டை விட்டு வெளிநாடு சென்றார். கட்சியை நிசார் மௌலானா குழுவிர் தொடர்ந்தும் வழிநடத்தி சென்றனர். அதன் பின்னர் ஐக்கிய முஸ்லிம் மக்கள் முன்னணி (UMPA) என்று பெயர் மாற்றப்பட்டு குதிரைக்குப்பதிலாக இரட்டைக்கொடி சின்னம் பெறப்படுகிறது. காலப்போக்கில் ஏற்பட்ட சில பிரச்சினை காரனமாக தெற்கு அணி, கிழக்கு அணி என இரு அணிகளாக கட்சிக்குள் செயற்பட்டனர்.
மீண்டும் முஜிபுர்ரஹுமான் நாட்டுக்கு வந்து கட்சிக்கு உரிமை கோர முற்பட்ட போது பிரச்சினை மேலும் விரிவடைகிறது. ஐ.மு.ம.மு. (UMPA) யின் புதிய யாப்பில் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக யு.எல்.எம். ஹாரிப், பவுசர் மஹ்ரூப், நிசார் மௌலானா போன்றோர் உரிமையாளராக இருந்தனர். இநிலையில் நிசார் மௌலானா அணி, யு.எல்.எம். ஹாரிப் அணி என இரண்டாகப் பிரிகின்றனர். இதனால் கட்சி முடக்கப்படுகிறது.
செயற்பாடற்றிருந்த கட்சி 2010 யில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (UPFA) யில் ஏற்பட்ட பிளவினால் வெளியேறிய அருஜுன ரணதுங்க குழுவினர், முஸ்லிம் குரல் அமைப்பு மற்றும் ஏனைய 7 அரசியல் குழுக்களின் இணைவினால் ஜாதிக சபாவ (JS) என்று பெயார்மாற்றம் பெற்று ஸ்ரீபதி சூரியாராச்சி செயலாளராக நியமிக்கப்படுகின்றார். இக்கூட்டணியே வெற்றிக்கின்னம் சின்னத்துடன் இயங்கும் ஜனனாயக தேசிய முன்னனி (DNA). மக்கள் விடுதலை முன்னணி (JVP) யின் உறுப்பினர் விஜித ஹேரத் கூட்டணியின் செயலாளர். எதிர்பார்த்த தேர்தல் வெற்றிகிடைக்காமையினால் மிகக் குறுகிய காலத்தில் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டு இஸ்தம்பித நிலையினை அடைந்தது. தற்பொழுது இதன் செயலாளர் பந்துல த அல்விஸ் ஆவார்.
ஜனநாயக ஐக்கிய கூட்டணி (Democratic Unity Alliance)
2000 ஆம் ஆண்டு ஐ.மு.ம.மு. (UMPA) யில் ஏற்பட்ட பிரிவினால் யு.எல்.எம். ஹாரீப் அணியின் வடக்கு கிழக்கு முஸ்லிம் காங்கிறஸ் (NEMC) கட்சி 60 ஆவது அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்டு அதற்கு முயல் சின்னம் கிடைக்கிறது. இதற்கு தலைவராக எம்.எல்.ஏ. அஸீஸ், செயலாளராக யு.எல்.எம். ஹாரீப் நியமிக்கப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருந்த வேளை இக்கட்சியினை எ.ஜே.எம். முசம்மில், நசீர் அகமட் குழுவினர் தனதாக்கிக் கொள்கின்றனர். அதன் பின்னர் பெயரை ஜ.ஐ.கூ. (DUA) என்றும், சின்னத்தை இரட்டை இலையாகவும் மாற்றிக்கொன்டனர். தற்பொழுது இக்கட்சியின் செயலாளராக இசட்.எம். ஹிதாயத்துள்ள செயல்படுகின்றார்.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு (United Peace Alliance)
ஐ.மு.ம.மு. (UMPA) யில் ஏற்பட்ட பிரச்சினை காரனமாக நிசார் மௌலானா, கலிலுர்ரஹூமான் குழுவினருக்கு புதிய கட்சி ஆரம்பிக்க அனுமதி கிடைக்கிறது. பாத்திமா முனிறா தயாரித்த பத்திரத்திற்கு இணங்க முஸ்லிம் விடுதலை முன்னனி (MLF) வண்ணத்துப்பூச்சி சின்னத்துடன் உதயமாகிறது. தோர்தல் ஆனையாளார் கொன்டுவந்த புதிய ஆலோசனைக்கு அமைய பெயார்களில் சமய பதங்களை தவிர்கும் முகமாக ஐக்கிய சமாதான முன்னனி (UPF) என பெயார் மாற்றமடைந்தது. ஸ்ரீ.ல.மு.கா. (SLMC) ஸில் இருந்து வெளியேறிய தவிசாளர் பஸீர் சேகுதாவுத், செயலாளர் நாயகம் ஹஸன் அலி, நசார் ஹாஜியார் குழுவினர் தூய முஸ்லிம் காங்கிரஸ் (PMC) அனியாக ஐக்கிய சமாதான முன்னனி (UPF) யில் இனைந்து ஐ.ச.கூ. (UPA) யை தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மரணிக்கும்போது இருந்த யாப்பை கொண்டு உருவாக்கினர். இதன் செயலாளர் நாயகமாக எம்.ரி. ஹசன் அலி செயற்படுகின்றனர்.
தேசிய காங்கிறஸ் (National Congress)
2002 டிசம்பர் ரவூப் ஹக்கீமுடன் ஏற்பட்ட முரன்பாடு காரனமாக ஸ்ரீ.ல.மு.கா. (SLMC) ஸில் இருந்து அதாஉல்லாஹ், வைத்தியர் ஏ.எல்.எம். ஹப்றத், எஸ். சுபைர்தீன், கலாநிதி எ. உதுமாலெப்ப குழுவினர் வெள்யேறினர். ஸ்ரீ.ல.மு.கா. (SLMC) ஸில் இருந்து இக்குழு வெளியேறியதால் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து கட்சியை விடுவிப்பதில் ஊடகவியலாளர் லசந்த விக்ரமசிங்கவின் பங்கு மிகவும் முக்கியமானது. 2003.02.25 யில் இக்குழுவினர் அஷ்ரப் காங்கிரஸை (AC) எஸ். சுபைர்தீன் தலைமையில் ஆரம்பித்தனர். இதன் செயலாளராக வைத்தியர் ஏ.எல்.எம். ஹப்றத் நியமிக்கப்பட்டார்.
2004 பெப்ரவரியில் அ.கா. (AC) ஸில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சினையினால் அதாஉல்லாஹ் குழுவினர் வெளியேறி புதிய கட்சி ஒன்றை பதிவுசெய்வதற்கான பத்திரத்தை தாக்கல் செய்கின்றனர். அன்று கட்சி பதிவதற்கு கட்டுப்பாடுகள் குறைவாக இருந்ததால் தேசிய முஸ்லிம் காங்கிறஸ் (NMC) அங்கிகரிக்கப்படு காலியாய் இருந்த குதிரைச்சின்னம் கிடைக்கிறது. தோர்தல் ஆனையாளார் கொண்டுவந்த புதிய ஆலோசனைக்கு அமைய அரசியல் கட்சி பெயர்களில் சமய பதங்களை தவிர்கும் முகமாக 2005 செப்டம்பர் மாதம் தே.கா. (NC) என பெயர் மாற்றப்பட்டது. இதன் தலைவராகவும் செயலாளராகவும் அதாஉல்லாஹ் செயற்படுகின்றார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (Sri Lanka Muslim Congress)
1981.09.21 ஸ்ரீ.ல.மு.கா. (SLMC) என்ற இயக்கத்தின் முதலாவது அங்குராப்பன கூட்டம் காத்தான்குடியில் நடைபெற்றது. இயக்க நிலையில் இருந்து அரசியல் கட்சியாக மாற்றும் முஸ்தீப்பு எம். ரி. ஹசன் அலி, கட்டிட கலைஞர் எம். ஐ .எம் . இஸ்மாயில் ஆகியோரின் இலங்கை வருகையின் பின் நடைபெற்றது. அதேவேளை, எம்.எச். சேகு இஸ்ஸதீனின் வருகை முஸ்லிம் தேசியக் கோட்பாட்டினை தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபின் தலைமையில் மக்கள் மையப்படுத்தி மக்கள் அங்கிகாரம் கிடைக்க ஏதுவாக அமைந்தது.
1986.11.29 யில் அரசியல் கட்சிக்கான முதலாவது பிரகடனம் பாஷா விலாவில் நிறைவேற்றப்பட்டது. 1988 ஆம் ஆண்டு உள்ளுராச்சிமன்ற தேர்தலில் சுயட்சையாக தராசு சின்னத்தில் களமிறங்கியதே அதன் முதலாவது அரசியல் பிரவேசம் ஆகும். ஆனால் அன்றைய நாட்டின் சூழ்நிலை கருதி அத்தேர்தல் நடைபெறவில்லை. அதனைத்தொடர்ந்து 1988.02.11 யில் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு மரம் சின்னமாக கிடைக்கிறது.
2000.09.16 தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் மரனத்தின் பின் இனைத்தலைவர்களாக பேரியல் அஷ்ரப், ரவூப் ஹக்கீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். அதிகாரப் போட்டியில் ஏற்பட்ட பிரிவினால் பேரியல் அஷ்ரப் தேசிய ஐக்கிய முன்னனியின் (NUA) தலைவியாகவும் ரவூப் ஹக்கீம் ஸ்ரீ.ல.மு.கா. (SLMC) தலைவராகவும் செயர்பட களம் அமைத்துக் கொண்டனர். முடிவுறா உட்கட்சி பிரிவினால் அதாஉல்லாஹ் குழுவினர் 2002 டிசம்பரிலும் றிசாட் பதியுதீன் குழுவினர் 2003.01.13 யிலும் வெளியேறுகின்றனர். 2006 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது நசீர் அஹமட்டின் செயற்பாட்டினால் கட்சி முடக்கப்பட்டது. எனினும் செயலாளர் நாயகம் எம்.ரி . ஹசன் அலி செய்த மேன்முறையீட்டு நீதிமன்ற வழங்கினால் அத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. தொடரும் உட்கட்சி நெருக்குதல்களை தவிர்க்கும் முகமாக கட்சின் உயர் பீடம் , அரசியல் பீடம் என்பன ஒன்றாக்கப்பட்டு மெகா உயர்பீடத்துடனான பாதுகாப்பு ஏற்படுத்தப்படுகின்றது.
2015.11.06 கட்டாய உயர்பீட தீர்மானத்துக்கு மாற்றமாகவும் 2015.11.07 யில் 26 ஆவது ரோளர் தீர்மானததுக்கும் மாறாக 2015.11.25 யில் ஹக்கீம் திரிபுபட்ட கடிதத்தை தேர்தல் தினைக்களத்திற்கு அனுப்பியதால் கட்சி முடக்கப்படுகிறது. அதாவது செயலாளர் (கௌரவ பதவி), உயர்பீட செயலாளர் (அதிகார பதவி) என்று இரு பதவிகளை உருவாக்கி தலைவர் உயர்பீட செயலாளரை நியமிக்கலாம் என்று மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத யாப்புமாற்றமாகும்.
2016.08.23 யில் தாறுஸ்ஸலாம் கட்டட விகாரத்தில் தவிசானர் பஸீர் சேகு தாவூத் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்படுகிறார். 2016.12.16 யில் பிரதித் தலைவர் யூ.ரி.எம் அன்வரை சாட்சியாக வைத்து இஸ்லாமிய சமய கடமை அடிப்படையில் ரவூப் ஹகீம் தேர்தல் ஆனையகத்தில் பிரச்சினையை தீர்த்துக்கொள்கின்றனர். ஆனால் 2017.02.11 கட்டாய உயர்பீடத்தில் ரவூப் ஹகீம் வாக்குறுதிகளை மீண்டும் மீறியதால் ஹசன் அலி குழுவினர் வேளியேறினர். இதன் பின் ஹக்கீம் அதிகாரமற்ற செயலாளர் மன்சூர் ஏ காதரை நீக்கிவிட்டு அவ்விடத்திற்கு நிசாம் காரியப்பரை ஒற்றைச்செயலாளராக நியமித்தார்.
தேசிய ஐக்கிய முன்னனி (National Unity Alliance)
தே.ஐ.மு. (NUA) யானது 1999.08.23 யில் ஸ்ரீ.ல.மு.கா. (SLMC) மற்றும் ஸ்ரீ லங்கா முற்போக்கு முன்னணி (SLPF) என்பன இனைந்து ஆரம்பித்த கட்சியாகும். இதன் சின்னம் புறா. ஸ்ரீ.ல.மு.கா. (SLMC) தலைவரின் மரனத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பேரியல் அஷ்ரப் தெரிவுசெய்யப்பட்டார். 2010 வரை தீவிர அரசியலில் இம்முன்னணி இயங்கியது. பேரியல் அஷ்ரப் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றதும் தே.ஐ.மு. (NUA) க்கு பலர் உரிமை கோரினர். எனினும் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்த ஆசாத் சாலிக்கு கட்சி உரித்தாகியது. அதன் சின்னமாக மூக்கு கண்ணாடி அறிவிக்கப்பட்டது. தலைவராகவும் செயலாளராகவும் அவரே செயர்படுகிறார். ஆசாத் சாலியின் விண்ணப்பத்தை ஏறுகொண்ட தேர்தல் திணைக்களம் மீண்டும் புறா சினத்தை வழங்கியது.
அகில இலங்கை மக்கள் காங்கிறஸ் (All Ceylon Makkal Congress)
மலையக தொழிலாளர் சங்கங்களான தேசிய தொழிலாளர் சங்கம் (The NUW), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) என்பவற்றின் அரசியல் பிரிவில் அதிருப்தியால் வெளியேறிய செயற்பாட்டாளர்களினால் தேசிய ஜனநாயகக் கட்சி (The NDP) 2001.10.13 யில் மயில் சின்னத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் கந்தன் மயிலில் வருகிறார் என்று மலையகத்தின் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட போதிலும் அவர்களினால் வெற்றிபெற முடியவில்லை. இதனால் கட்சி இயக்கமற்ற நிலையில் இருந்தது.
ஸ்ரீ.ல.மு.கா. (SLMC) ஸில் இருந்து வெளியேறி புதிய அனியாக செயல்பட்ட றிசாட் பதியுதீன் அணியினர் தங்கள் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக இக்கட்சியினை 2005 ஒக்டோபரில் கையேற்று அதன் பெயரை அகில இலங்கை முஸ்லிம் காங்கிறஸ் (ACMuslimC) என்று பெயர் மாற்றம் செய்கின்றனர். இதற்கு என். எம். சஹீட் தலைவராகவும் வை. எல். எஸ். ஹமீட் செயலாளர் நாயகமாகவும் நியமிக்கப்பட்டனர். சட்ட சிக்கல் காரணமாக ரிஷாட் பதியுதீன் இக்கட்சியின் தலைமைப்பதவியை அன்று ஏற்க வில்லை. 2011.05.29 யில் ரிஷாட் பதியுதீன் இக்கட்சியின் தலைவராகவும் வை.எல்.எஸ். ஹமீட் செயலாளர் நாயகமாகவும் பின்னர் தெரிவு செய்யப்பட்டனர்.
தோர்தல் ஆனையாளார் கொன்டுவந்த புதிய ஆலோசனைக்கு அமைய பெயார்களில் சமய பதங்களை தவிர்கும் முகமாக அ.இ.ம.கா. (ACMakkalC) என்று பெயரை மாற்றிக் கொண்டனார். வை.எல்.எஸ். ஹமிட்டுக்கும் ரிஷாட் பதியுதீனுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் கட்சி முடக்கப்பட்டு நீண்ட காலமாக நீதிமன்ற வழக்கில் இருந்தது. இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்படின் பின் மீண்டும் செயலாளராக வை.எல்.எஸ். ஹமிட் செயற்படுகின்றார்.
ஐக்கிய தேசிய கூட்டணி (United National Alliance)
ஸ்ரீ.ல.மு.கா. (SLMC) தலைவர் எம.எச்.எம் அஷ்ரபுடன் ஏற்பட்ட முரன்பாட்டின் காரணமாக, எம். எச். சேகு இஸ்ஸதீன் குழுவினர் விலகி அப்துல் ரசூல் தலைமையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கட்சியை (SLMK) உருவாக்கினர். இதன் செயலாளராக ஜவாத் மரைக்கார் செயல்பட அதற்கு தராசு சின்னம் கிடைத்தது. எனினும் தனிக்கட்சியாக தேர்தல் களத்தில் மக்கள் ஆதரவு கிடைக்காமையால் அதன் செயற்பாடு மந்தகதியில் இருந்தது.
இந்நிலையில், 2005 மே மாதம் நசீர் அஹமட் இக்கட்சியை பொறுப்பேற்று அதன் செயலாளராக செயல்பட்டார். நஸீர் அஹமட்டின் வருகையைத் தொடர்ந்து, தேர்தல் கூட்டாக பதிவுசெய்யப்படாத ஐக்கிய முஸ்லிம் மக்கள் கூட்டமைப்புடன் சேர்ந்து முஸ்லிம் தேசிய கூட்டமைப்பாக (MNA) பெயர் மாற்றப்படுறுகிறது. இக்காலப்பகுதியில் தேர்தல் கூட்டுக்காக ஏனைய கட்சியின் அங்கத்தவர்களை உள்வாங்கும் நோக்கிலும் கட்சியில் உள்ளவர்கள் ஏனைய கட்சியில் அங்கத்துவம் பெற்று தேர்தல் கேட்கும் நோக்கிலும் ஸ்ரீ.ல.மு.கா. (SLMC) ஸின் யாப்பில் இரட்டை அங்கத்துவம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
தற்பொழுது இக்கட்சிக்கு ஸ்ரீ.ல.மு.கா. (SLMC) ஸின் பா.உ. களான எம்.எச்.எம். சல்மான் இனைத்தலைவராகவும், வைத்தியர் அ.ர.அ. ஹபீஸ் தேசிய அமைப்பாளராகவும், மஸீஹூடீன் நயீமுல்லாஹ் செயலாளர் நாயகமாகவும் செயற்படுகின்றனர். தற்பொழுது இக்கட்சியின் பெயர் ஐக்கிய தேசிய கூட்டணி (UNA) என மாற்றப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (National Front for Good Governance)
உணர்ச்சிபூர்வமாக அன்றி அறிவுப்பூர்வமாக சிந்தித்து அரசியல் முன்னெடுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் 2006 யில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (PMGG) பொறியியலாளர் எம்.எம்.ஏ. ரஹுமான் அவர்களின் தலைமையில் காத்தான்குடியில் ஆரம்பமானது. இலங்கை ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தின் அரசியல் பிரிவாக கருதப்பட்ட அமைதிக்கும் சமாதானத்துக்குமான முன்னணி (FJP) எம்.ஆர்.எம். நஜாஹ் தலைமையில் இயங்கி வந்தது. இவ்விருவரின் எண்ணக்கருவில் உதயமான ‘நாம் இலங்கையர்’ எனற பொது நோக்கில் இவ்விரு இயக்கமும் இணைந்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) உருவானது. 2017 ஜூலை மாதம் அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்டு இரட்டை கொடி சின்னம் கிடைத்தது. வடக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) மற்றும் தெற்கின் மக்கள் விடுதலை முன்னணி (JVP) போன்ற கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து தனது அரசியல் பயணத்தினை தேசிய புரிந்துணர்வுடன் தொடர்கின்றனர். இதன் செயலாளர் நாயகமாக எ.எல்.எம். சபீல் செயற்படுகின்றார்.
ஐக்கிய காங்கிரஸ் கட்சி (United Congress Party)
2005 ஜூன் மாதம் உலமா கட்சியினை முபாரக் அப்துல் மஜீத் கல்முனையில் ஆரம்பித்தார். சுயேச்சையாகவும் கூட்டாகவும் பல தேர்தல்களில் போட்டியிட்டும் அரசியல் கட்சிக்கான அந்தஸ்து நீண்ட காலமாக கிடைக்க வில்லை. 2020 யில் தேர்தல் திணைக்களத்தின் ஆலோசனைகளுக்கு அமைய கட்சியின் பெயர் ஐக்கிய காங்கிரஸ் கட்சி (UCP) யாக மாற்றப்பட்டது. 2022.11.28 யில் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு ஒட்டகம் சின்னமாக கிடைத்தது. இதன் செயலாளராக முஜாஹித் முபாரக் செயற்படுகின்றார்.
எத்தனை முஸ்லிம் கட்சிகள் உருவெடுத்தாலும் அவைகள் தேர்தல் கூட்டுக்காகவும் தனிநபர் வெற்றிக்காகவும் செற்படுகின்றன என்பதை இக்கட்சிகளின் அண்மைக்கால தேர்தல் செயற்பாடுகள் நிரூபிக்கின்றன. ஆயிரம் விளக்குடன் எதனை ஆதவன் எழுந்து வந்தாலும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் தலைமைத்துவ வெற்றிடம் இன்னும் கட்சி அரசியலினால் நிறைவேற்றப்படவில்லை. கிழக்கு மக்களின் பிரதேசவாத செயற்பாடுகளினால் யானைப்பாகன் அற்ற கூட்டமாகவே முஸ்லிம்களின் கட்சி அரசியல் உள்ளது என்ற கசப்பான செய்தியை முஸ்லிம் தேசியம் அங்கீகரித்தே ஆக வேண்டும்.
0 comments :
Post a Comment