இலங்கை, அநுராதபுர சுற்றுலா தளங்கள் வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரக்கூடியவை. ஓர் எக்ஸ்ரே ரிப்போட்


அஷ்ரப். ஏ. சமத்-
லங்கைக்கு வரும் சுற்றுலாப் பிரயாணிகளில் நூற்றுக்கு மூன்று வீதம் மட்டுமே அநுராதபுர நகருக்கு வருகின்றனர் இலங்கை வரும் சுற்றுலாப் பிரயாணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நேரடியாக சுற்றுலாப் பிரயாணிகள் தெற்கு பிரதேசத்திற்கும் கொழும்பில் உள்ள கடற்கரையோரங்களில் உள்ள உல்லாச ஹோட்டல்களுக்குமே சுற்றுலா வழிகாட்டிகளும் பிரயாண முகவர்களும் அழைத்துச் செல்கின்றனர். இத்துறையிலும் சில மாபியாக்கள் உள்ளனர். இலங்கை சுற்றுலா அதிகார சபையில் உள்ள பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் 5 நட்சத்திர ஹோட்டல்கள் உரிமையாளார்களாக உள்ளனர். அவாகளது சொந்த ஹோட்டல்களுக்கே அதிகமான உல்லாசப்பிரயாணிகளை அழைத்துச் செல்கின்றனர்
ஆனால் இலங்கையில் மிகப் பழைமை வாய்ந்த புராதன உலக பராம்பரிய நகரமான அநுராதபுர நகரை சுற்றுலாப்பிரயாணிகளுக்கு அறிவுறுத்துவதில்லை. என வடமத்திய மாகாண சுற்றுலாத்துறை ஹோட்டல்கள் சார்ந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களமும் இலங்கை சுற்றுலா அதிகார சபையும் வடமத்திய மாகணத்தின் சுற்றுலா அமைச்சும் இணைந்து கொழும்பிலிருந்து 60க்கும் மேற்பட்ட அச்சு மற்றும் இலக்ரோணிக் ஊடகவியலாளர்களை அநுராதபுரத்திற்கு கடந்த வாரம் அழைத்துச் சென்றனர் அங்கு ஊடகவியலாளாகள் இரண்டு நாட்கள் தங்கி நின்று அநுராதபுரத்தில் உள்ள சில முக்கிய சுற்றுலாத் தளங்களையும் பண்டைய காலத்து ஹோட்டல்களையும் அத்துறை சார்ந்தவாகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்தனர் அத்துடன் இந் நகரின் உள்ள இயற்கைகளையும் பாரம்பரிய சுற்றுலாத்தளங்களையும் அவதானித்து சுற்றுலாப் பிரயாணிகளை கவருவதற்கு உள்ளுர் வெளிநாட்டு பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்துமாறும் வேண்டிக் கொண்டனர்

அத்துடன் தங்களது பேனாவிலும் கமராக்களினாலும் சமூகவலைத்தளங்களிலும் இப்பிரதேசத்தினை ஊடக ஆவணப்படுத்துமாறும் வடமத்திய மாகாணசபையின் பிரதம செயலாளர் அறிவுறுத்தினார்
அங்கு கருத்துத் தெரிவித்த சுற்றுலா ஹோட்டல்கள் உரிமையாளா சங்கத்தின் பிரதிநிதி அநுராதபுரத்திற்கு வரும் சில உல்லாசப் பிரயாணிகள் திருகோணமலை . கண்டி நுவரேலியா போக்குவரத்து செய்யும் வாகனத்திலிருந்தவாரே சில புரதான நகரங்களைக் கண்டு கழித்துச் செல்கின்றனர். ஆனால் ஆசிய நாடுகளான சீன. நேபாலம் தாய்லாந்து . யப்பான் பூட்டான் போன்ற நாடுகளிலிருந்து வரும் உல்லாசப் பிரயாணிகளும் சிறிய அளவிலானவர்களும் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் உள்ளுர்வாசிகளுமே அநுராதபுர புனித நகரத்தினை தரிசிக்க வருகின்றனர்.

அதில் உள்ளுர் வாசிகள் இலவசமாகவும் காலையில் தங்களது வாகனத்தில் வந்து அன்ரே தமது வீடுகளுக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் இங்குள்ள ஹோட்டல்களில் இருந்து அங்குள்ள ஆயுல்வேத பரம்பரை வைத்தியம், இங்குள்ள சுவாத்தியமான மரங்கள் கற்பாறைகள் பாரம்பரிய உணவுமுறைகள் ,உடற்பயிற்சிகள் பௌத்த முறையில் ஆராதனை மௌன விரதம் யோகாசனம் இங்குள்ள 5க்கும் மேற்பட்ட பரம்பரையான வாவிகளில் இயந்திரப் படகுகள் சுற்றிப் வலம் வருவது, வில்பத்து வனப்பிரதேசங்களில் மிருகங்கள் பறவைகளை பார்வையிடல் வாவிகளில் வந்து நீர் அருந்தும் யாணைகளை பார்வையிடல் போன்ற வற்றைப் பாரவையிடுவதற்கும் சுற்றுலாப்பிரயாணிகள் இங்கு பிரயாணம் செய்து விடுமுறை கழிப்பதற்காக வருதல் வேண்டும். என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்

இதற்கான வழிவகைகளை அரசாங்கமும் தனியார் முகவர்கள் நிலையங்களும் கருத்திற் கொள்ளுதல் வேண்டும். முக்கியமாக ஜரோப்பிய நாடுகள் ரசியா பிரயாணிகள் கடலோரங்களில் நீந்தி , உண்டு மது அருந்தி சந்தோசம் கொண்டாட வேண்டுமென்றால் கொழும்பு மற்றும் தெற்கே உள்ள ஹோட்டல்களே சாலச் சிறந்தாகும். ஆனால் அநுராதபுரம் ஒரு புனித பூமியாகும். இங்கு பௌத்த சித்தாந்தங்களைக் கண்டு கழித்து ஆரோக்கியமாகவும் தமது பொழுதைக் கழிப்பதற்கும் நிதானமாகவும். மன ஆறுதல் கொண்டவரகளே அநுராதபுரம் வரமுடியும் எனவும் வடமத்திய மாகாண சுற்றுலா பணிப்பாளர் கருத்துத் தெரிவித்தார்

இலங்கையில் உள்ள மக்களில் நுற்றுக்கு 52 வீதமானவர்களே அநுராதபுரத்தினை கண்டு கழித்துள்ளனர் உள்ளுர் வாசிகளும் இந் நகரில் தங்கி நின்று புரதான நகரங்களை கண்டு கழித்தல் வேண்டும்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட கொவிட் 19 மற்றும் பொருளாதார சீர்கேடுகளினால் அநுராதபுர உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் மற்றும் இத்துறை சார்ந்த தொழிலாளார்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 10க்கும் மேற்பட்ட உல்லாச ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இத்துறை சார்ந்தவர்கள் நேரடி மறைமுகமாக வருமானம் பெருபவாகள் தமது வருமானங்களை இழந்துள்ளனர். அநுராதபுர நகருக்கு வரும் உள்ளுர் சுற்றுலாப் பிரயாணிகளுக்கு உலக பாரம்பரிய நகரத்தினை கண்டுகழிப்பதற்காக வருபவாகளுக்கு அனுமதி இலவசம். வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளுக்கு பிரவேச சீட்டு 25 ஆமேரிக்க டொலர் அறவிடப்படுகின்றது. தெற்காசிய நாடுகளுக்கு 12.5 டொலர் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அநுராதபுர நகரை கண்டுகழிப்பதற்கு தாய்லாந்து. பூட்டாண் சீன.யப்பாண் போன்ற பௌத்த சித்தாந்தங்களை அறிந்து கொள்ள விரும்பும் சுற்றுலாப்பிரயாணிகள் யாத்திரிகளே இங்கு அரிதாக வருகின்றனர்

அநுராதபுர உலக பாரம்பரிய நகரமானது வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுர நகரமாகும். எனினும் 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும் புகழுமாக அநுராதபுர நகரம் பெயா; பெற்று விளங்கியது.
எனினும் இந் நகரைப் சுற்றி 5 பெரிய நீர்ப்பாசணக் குளங்கள் மிகப் பண்டைய காலம் முதலே இருந்து வருகின்றன. இக் குளங்கள் விவசாயம் செய்வதறகு பயண்படுத்தப்பட்டன. 2500 ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் குளங்கள் இன்னும் தற்போதைய மக்களால் பயன்பாட்டில் உள்ளன.
அநுராதபுர நகருக்கு அண்மித்ததாக பல பாரிய பௌத்த விகாரைகளும் இருந்தன. தொல் பொருள்ளாளர்கள் இதனை தொல்பொருள் நூதனசாலை, அடையாளச் சின்னங்களாக பிரகடனப்படுத்தியுள்ளன . அத்துடன் யுனஸ்கோ நிறுவனமும் இதனை உலக தொல்பொருள் சின்னங்களாக வெளிக்கெணரப்பட்டுள்ளன. பண்டைய காலத்து மன்னாகளின் அரன்மனைகள் வழிபாட்டுக் கட்டிடங்கள் பௌத்த சித்தாத்தங்கள்,வைத்தியசாலைகள் பயணிகள் தங்குமிடங்கள் மற்றும் அலங்காரத் தடயங்கள். பௌத்த குருமார்கள் வாழ்ந்த இடங்களும் இதில் அடங்குகின்றன.

அநுராதபுரத்திற்கு ஊடகவியலாளாகளை அழைத்துச் சென்று காண்பிக்கப்பட்ட இடங்களான திசாவாவி ரண்மசுபூங்கா, இசுருமுனிய, சந்திரவட்டக்கல்,பங்குவிய, இரட்டைப் பொய்கை (குட்டம்பொகுன) .கற்பாலம், மிகிந்தலை ,போன்ற 50க்கும் மேற்பட்ட புரதான சின்னங்கள் உள்ளன.
இரட்டைப் பொய்கை
முதலாவது அக்போ அரசால் கி.மு. 567-591)காலப்பகுதியில் அபயகிரி விகாரை பிக்குகளின் நீர் வசதியாக அலங்காரமாக நிர்மாணிக்கப்பட்ட இரட்டை தடாகமாகும். இதன் பெரிய பொய்கை 40.23 தர 15.24 மீற்றர்களாகும். சிறிய பொய்கை 27.74 தர 17.37 மீற்றரும் கொண்டது.

சந்திரவட்டக்கல்
கட்டிடங்களின் கதவுக்கு முன்னால் காற்துடைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட படிக்கல் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. சந்திரனின் அரைவட்ட வடிவத்தைக் கொண்டிருக்கின்றது.

கற்பாலம்
அநுராதபுர யுகத்தின் ஆரம்பாலத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு செல்வதற்காக காணப்பட்ட வீதித் தொகுதயில் இது அமைக்கப்பட்டுள்ளது. அருவி ஆற்றுக்கு மேலாக பயணம் செல்வதற்காக இது அமைக்க்கப்பட்டள்ளது. அநுராதபுரத்திலிருந்து வடபகுதிக்கான பாதை காணப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருவி ஆற்றின் வெள்ளப்பெருக்கு அளவை கருத்திற்கொண்டு ஆற்றுக்கு குறுக்காக நடப்பட்ட கற் தாண்களின் மீது குறுக்காக கற்பலகைகள் வைக்கப்பட்டு அதன் மேல் நீளப்பாடாக ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கக் கூடியவாறு இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது 50 மீட்டர் நீளமுமுடையது.

அத்துடன் அநுராதபுரத்தில் இருந்து மன்னார் வரையிலான ஒரு வாவி இரு மருங்கிலும் பறவைகளும் இயற்கையான மலர்களுடன் அப்பிரதேசத்தினை உலாவ வருவதற்கும் உல்லாசப் பிரயாணிகளை கவரும் வர்ணத்தில் அமையப் பெற்றுள்ளன. ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள சிறிய சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்களை இதனை அபிவிருத்தி செய்து பாதுகாப்புடன் வாவிகள் ஊடகவே தோணிகள் இயந்திரப் படகு ஊடக கண்டு கழிப்பதற்கு அரசாங்கம் சில வழிவகைகளைச் செய்து கொடுத்தல் வேண்டும். இத் திட்டத்தினை அபிவிருத்தி செய்யுமிடத்து உள்ளுர் பிரயாணிகள் இவ் இயற்கையை கண்டுகழிக்க முடியும்.
அதே போன்று வில்பத்து காடு வனப்பகுதியில் அநுராதபுரம் தொண்டு மன்னார் வரையிலான பிரதேச வனவளத்திற்கு சுற்றுலாப் பிரயாணிகள் மிருகங்களையும், இயற்கை வளங்களையும் கண்டு கழிப்பதற்கு அதற்கான பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்பு உள்வாகன செலுத்தும் பாதைகளை அமைப்பதுடன் இங்கு ஹோட்டல் வசதிகளை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் எனத் தெரிவிக்கின்;றனர்.. இத்துறையை மீள அபிவிருத்தி செய்யுமிடத்து இப்பிரதேசம் சுற்றுலாத்துறையில நேரகடியாகவும் உள்ளுர் மக்களும் பொருளாதார ரீதியாக நன்மையடைய முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :