எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு சென்ற கல்முனை,சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் வசிக்கும் 04 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர்


வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று (21) காணாமல் போயுள்ளனர்.
அவர்கள் நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உல்லாச சுற்றுலா வந்த கல்முனை தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்விகற்கும் 10 மாணவர்கள் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காகச் சென்ற நிலையில், நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
கல்முனை,சம்மாந்துறை  மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் வசிக்கும் இருபத்தி இரண்டு முதல் இருபத்தி மூன்று வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :